பெண்களை வர்ணிப்பதும் பாலியல் இம்சையே.!

Published By: Robert

03 Nov, 2016 | 10:07 AM
image

மாண­வி­யொ­ரு­வரின் அழகை விமர்­சித்தால் வர்­ணனை செய்தால் கூட அதுவும் பாலியல் இம்­சை­யா­கு­மென இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு வின் மட்­டக்­க­ளப்பு பிராந்­திய இணைப்­பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரி­வித்தார்.

காத்­தான்­குடி மத்­திய மகா வித்­தி­யா­லய தேசிய பாட­சா­லையில் அண்­மையில் நடை­பெற்ற மாண­வர்­களும் ஒழுக்க விழு­மி­யமும் எனும் செய­ல­மர்வில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பிடு­கையில்,

ஒரு பெண்ணின் அழகை விமர்­சித்தால் வர்­ணனை செய்தால் அதுவும் கூட பாலியல் இம்­சை­யாகும். அந்தப் பெண்­ணுக்கு செய் யும் பாலியல் தொந்­த­ர­வாகும். அதே­போன்­றுதான் ஒரு பாட­சாலை மாண­வி­யொ­ரு­வரின் அழகை விமர்­சித்தால் வர்­ணனை செய்தால் கூட அதுவும் பாலியல் இம்­சை­யாகும். 16 வய­துக்­குட்­பட்ட பெண்­ணொ­ருவர் விரும்­பி­னாலும் கூட அப் பிள்­ளையை இம்­சைக்­குள்­ளாக்­கினால் இம்­சையை ஏற்­ப­டுத்­து­பவர் குற்­ற­வா­ளி­யாக கரு­தப்­ப­டுவார். இதை தண்­டனைச் சட்டம் தெளி­வாக கூறு­கின்­றது.

குடும்­பத்தில் வன்­முறை ஏற்­ப­டு­கின்ற போது கண­வனோ மனை­வியோ இரண்டு பேரும் பேசும்­வார்த்­தை­க­ளினால் பேச்­சுக்­க­ளினால் பிள்­ளைகள் பாதிக்­கப்­ப­டு­மாக இருந்தால் கணவன், மனை­விக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யு­மென தண்­டனைச் சட்டக் கோவை குறிப்­பி­டு­கின்­றது.

21வய­துக்­குட்­பட்ட இளை­ஞர்கள் மற்றும் மாண­வர்­க­ளுக்கு புகைத்தல் அல்­லது கஞ்சா மற்றும் சுருட்டு போன்­ற­வை­களை வழங்­கு­வதும் குற்றம், அவர்கள் வாங்­கப்­போ­வதும் குற்றம், அவர்­களை வாங்­கு­வ­தற்கு அனுப்­பு­வதும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். அவர்­களை கைது­செய்­வ­தற்கு சட்­டத்தில் இட­முண்டு. விற்­பனை செய்­ப­வர்­க­ளையும் கைது செய்­ய­மு­டியும். ஒரு பாட­சாலை மாணவன் அவ­னது பாட­சாலை பைக்குள் அல்­லது பாட­சாலை உப­க­ர­ணங்­க­ளுக்குள் தேவைற்ற கூடாத ஆபாச படங்கள் வைத்­தி­ருந்தால் அதுவும் குற்­ற­மாகும். மாண­வர்­களின் ஒழுக்க விட­யங்­களில் பாட­சாலை அதிபர், ஆசி­ரி­யர்கள், பாட­சாலை சமூக அவ­தா­னத்­துடன் நடந்­து­கொள்ள வேண்டும்.

மாண­வர்கள் ஒழுக்க விழு­மி­யங்­களை மீறி செயற்­படும் போது அந்தப் பாட­சா­லை­யி­லுள்ள ஒழுக்­காற்­றுக்­குழு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். குறித்த மாண­வரின் பெற்­றோரை அழைத்து அவர்­களின் பிள்­ளையின் ஒழுக்கம் தொடர்­பான விட­யங்­களை எடுத்துக் கூற­வேண்டும். பிர­தேச மற்றும் வலயக் கல்­விப்­ப­ணிப்­பா­ளருக்கும் அறி­விக்க வேண்டும். அதற்கும் அந்த மாண வன் திருந்தா விட்டால் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று பாடசாலையை விட்டு குறித்த மாணவனை இடை நிறுத்த முடியும்.

ஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தை கட்டி யெழுப்ப அனைவரும் முயற்சிக்க வேண்டு மென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50