நாமலின் கோரிக்கையை பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நிராகரிப்பு - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 4

03 Jul, 2022 | 09:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணையுமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கையை பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவது முற்றிலும் தவறானது - திஸ்ஸ விதாரன  | Virakesari.lk

நாடும், நாட்டு மக்களும் தற்போது மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொள்வதற்கு ராஜபக்ஷர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளே காரணம்.

ஆகவே ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை என தீர்மானித்துள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தம்மிடம் உள்ளது என்ற தைரியத்தில் தன்னிச்சையாக செயற்பட்டது.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது சுகாதார அறிவுறுத்தல்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை மாறாக அரசியல் காரணிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்பட்டது.

கொவிட் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என அறிவியல் ரீதியிலான ஆலோசனை வழங்கப்பட்ட போதும் அதற்கு மதிப்பளிக்கப்படாமல் அரசியல் மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படாத காரணத்தினால் முஸ்லிம் சமூகத்தினரதும், முஸ்லிம் நாடுகளினதும் அதிருப்தியை பெற்றுக்கொள்ள நேரிட்டது.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவி;ற்கு நிதியமைச்சு பதவி வழங்கப்பட்டது.பொருளாதாரம் தொடர்பில் அடிப்படை தகைமையற்ற அவருக்கு நிதியமைச்சு பதவியை வழங்க வேண்டாம் என பலமுறை எடுத்துரைத்தும் அது குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை. தவறான பொருளாதார மற்றும் நிதி முகாமைத்துவம் முழு பொருளாதாரத்தையும் பாதிப்பிற்குள்ளாக்கியது.

மக்களின் போராட்டத்திற்கு முன் நிறைவேற்றதிகாரம் , மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆகியவை ஒரு பொருட்டல்ல என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு நலனை கருத்திற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம்.

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி பொதுஜன பெரமுன தலைமையில் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஒன்றினையுமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளோம்.

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளமைக்கு ராஜபக்ஷர்கள் மாத்திரமே பொறுப்புக்கூற வேண்டும். ஆகவே இனியொருபோதும் ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைய போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37