எரிபொருள் கையிருப்பு தீர்ந்துபோவதால் இலங்கை நகரமுடியாமல் முடங்குகின்றது –ஏஎவ்பி

Published By: Rajeeban

03 Jul, 2022 | 08:56 PM
image

டீசலை பெறுவதற்கான வழிஎதுவுமில்லாததன் காரணமாக நாளை ( திங்கட்கிழமை) நிலைமை மோசமடையும் என அவர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை பேருந்துசேவைகள் குறைக்கப்படும் என தெரிவித்த அவர் உடனடி தீர்விற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என குறிப்பிட்டார்.

---------------------

இலங்கையிடம் ஒரு நாளிற்கும் குறைவான எரிபொருளே கையிருப்பில் இருப்பதாக எரிசக்திதுறை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை காஞ்சனவிஜயசேகர தெரிவித்தார்,அதேவேளை நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்ததால் பொதுப்போக்குவரத்து செயல்இழந்துள்ளது.

அனேகஎரிபொருள்நிரப்பும் நிலையங்களில் பல நாட்களாக எரிபொருள் இல்லாத போதிலும் தலைநகரில் பல கிலோமீற்றர் தூரத்திற்கு எரிபொருள் வரிசைகள் நீள்கின்றன.

நாட்டின் பெட்ரோல் கையிருப்பு 4000 தொன்னாக காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர இது ஒருநாள் நுகர்விற்குபோதுமானதல்ல எனவும் குறிப்பிட்டார்.

அடுத்த பெட்ரோல் கப்பல் 22 அல்லது 23ம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏனைய விநியோகஸ்தர்களை தொடர்புகொண்டுள்ளோம் ஆனால் 22ம் திகதிக்கு முதல் புதிய விநியோகம் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை அவசரதேவைகளிற்காக பெட்ரோல் டீசலை சேமிப்பதற்காக இரண்டு வாரங்களிற்கு அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை அனேக கடைகள் மூடப்பட்டிருந்தன, திங்கட்கிழமை வங்கிகளும் வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டவுடன் நிலைமை மோசமடையும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

நெருக்கடியான நிலையில் சிக்குண்டுள்ள மக்கள் வீதிகளில் காணப்படும் ஒருசில வாகனங்களை மறித்து பயணம் செய்ய முயல்வதை காணமுடிந்தது.

நாட்டின் பேருந்துபோக்குவரத்துசேவையில் மூன்றில் இரண்டு வீதமாக காணப்படும் தனியார் பேருந்துகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை மிகவும் குறைந்தளவே சேவையில் ஈடுபட்டன.

எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களிற்கு சொந்தமான 20,000 பேருந்துகளில் ஆயிரம் பேருந்துகளை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தினோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜயரட்ண தெரிவித்தார்.

டீசலை பெறுவதற்கான வழிஎதுவுமில்லாததன் காரணமாக நாளை ( திங்கட்கிழமை) நிலைமை மோசமடையும் என அவர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை பேருந்துசேவைகள் குறைக்கப்படும் என தெரிவித்த அவர் உடனடி தீர்விற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என குறிப்பிட்டார்.

இலங்கையின் பிரபலமான போக்குவரத்து சாதனமான முச்சக்கரவண்டிகளும் வீதிகளில் காணப்படவில்லை,அனேக முச்சக்கர வண்டிகள் ஆறுலீற்றர் பெட்ரோலை பங்கீட்டு அடிப்படையில் பெறுவதற்கான வரிசையில் காணமுடிந்தது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27