மூத்த சிங்கள  மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான பண்டித் டபிள்யூ. டி. அமரதேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.