எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று டோக்கன்களை கேட்காதீர்கள் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர 

Published By: Digital Desk 4

03 Jul, 2022 | 06:20 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் கப்பல் குறிப்பிட்ட தினத்தில் நாட்டை வந்தடையாது என்ற அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு மாத்திரமே பதிவு செய்து சிட்டைகளை (டோக்கன்) வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே தற்போது எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்று சிட்டைகளைக் கோரவோ அதற்காக காத்திருக்கவோ வேண்டாம் என்று வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொது மக்களை கேட்டு;க் கொண்டார்.

Articles Tagged Under: வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர | Virakesari.lk

வலுசக்தி அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி நாட்டுக்கு வரவிருந்த கப்பல் வருகை தராது என்பது உறுதியாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் , மக்களை அநாவசியமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று அறிவித்தோம். அத்தோடு அதுவரையிலும் அதற்கு முன்னரான சில தினங்களாகவே வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு மாத்திரம் பதிவு செய்து சிட்டைகளை (டோக்கன்) வழங்குமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அதற்கமைய வரிசைகளில் உள்ளவர்களை அங்கிருந்து அனுப்புவதற்கும் , வரிசைகள் நீளாமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இது தவறான முறைமைக்குள் சென்று , ஏற்கனவே வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு சிட்டைகளை வழங்கி நிறைவு செய்து, புதிதாக இணைபவர்களுக்கும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாம் வழங்கிய ஆலோசனை இதுவல்ல.

இவ்வாறு சிட்டைகளைப் பெறுவதற்காக ஒன்று கூட வேண்டாம் என்று கோருகின்றோம். எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் முறையான வழிமுறையொன்றின் கீழ் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது வரையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குச் சென்று சிட்டைகளைக் கோர வேண்டாம். அதுவல்ல முறைமை. எரிபொருள் கப்பல் வராது என்று அறிவிக்கப்பட்ட தினத்தன்று வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு மாத்திரமே சிட்டை வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது.

தற்போது அது துரதிஷ்டவசமாக வேறு வியாபாரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று கருப்பு சந்தைகளில் 1000 - 2000 வரை எரிபொருட்களை விற்பனை செய்கின்றனர். பதுக்கி வைத்திருக்கும் எரிபொருளை விற்பனை செய்கின்றனர். சிலர் அதனை பயன்படுத்துகின்றனர். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குரிய எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படாத போதிலும் வாகன பாவனை பெருமளவில் குறைவடையவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49