தேசிய அர­சாங்­கத்தில் ஸ்தாபிக்கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்னர் அனை­வ­ரி­னதும் ஒத்­து­ழைப்­புடன் தேர்தல் முறையில் மாற்­ற­மொன்றை கொண்­டு­வர எதிர்­பார்ப்­ப­தாக இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

பல்­வேறு தரப்­பி­னரின் யோச­னைகள் மற்றும் கருத்­து­களின் அடி­ப­டையில் அர­சியல் அமைப்பு ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்­கான அனைத்து செயற்­பா­டு­க­ளையும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் அமைந்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே இரா­ஜங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.

தேசிய அர­சாங்­கத்தின் கீழ் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் ஒரு சில கட்­சிகள் மாறு­பட்ட கருத்­து­களை தெரி­விக்­கின்­றன. ஆனால் தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றை கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் அனைத்து பெரு­பான்மை மற்றும் சிறு­பான்மை கட்­சிகள் ஒரே நிலை­பாட்­டி­லேயே காணப்­ப­டு­கின்­றன. அந்­த­வ­கையில் புதிய அர­சியல் அமைப்;பு ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்கு முன்னர் தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

எமது நாட்டில் இன்று காணப்­ப­டு­கின்ற அர­சி­ய­ல­மைப்பின் சில கட்­ட­மைப்­பு­களின் பிர­காரம் ஆட்சி மாற்­றத்­திற்­கேற்ப அதன் செயற்­பா­டுகள் மற்றும் கொள்­கை­க­ளிலும் மாற்­றத்தை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இவ்­வா­றான விட­யங்­களில் மாற்றம் ஒன்று கட்­டா­ய­மாக தேவை­யா­க­வுள்­ளது. மறு­புறம் எமது நாட்டில் காணப்­ப­டு­கின்ற இல­வச கல்வி, இல­வச சுகா­தாரம், அரச திணைக்­க­ளங்கள் போன்­ற­வற்றை சக்­தி­மிக்­க­தாக மாற்­றி­ய­மைக்க அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட வேண்டும்.

நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தில் மக்­க­ளுக்­கான பய­னுள்ள செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்கும் பொருட்டு ஒன்­றி­னைந்து செயற்­படும் நாம் தொடர்ந்தும் மக்­க­ளுக்­கான சேவை­களை முன்­னெ­டுப்போம் எவ்­வா­றான சந்­தர்ப்­பங்­க­ளிலும் எமது கொள்­கை­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த போவ­தில்லை என்றார்.

கேள்வி - பொது எதிர்க்­கட்­சியில் அங்­கத்­துவம் பெறும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்­வரும் உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் ஒன்­றி­னைந்து செயற்­ப­டு­வ­தற்கு உங்­களின் கட்சி அனு­ம­திக்­குமா?

பதில் - கட்­டா­ய­மாக ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கட்­சி­யினை சேர்ந்த ஒரு சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றி­னைந்த எதிர்க்­கட்­சியில் அங்­கத்­துவம் பெறு­கின்­றனர். அவர்கள் எதிர்­வரும் பொது தேர்­தலில் எம்­மோடு இணைந்து செயற்­பா­டு­வார்கள் ஆனால் இன­வாத செயற்­பா­டு­க­ளையும் கருத்­து­க­ளையும் முன்­னெ­டுப்­ப­வர்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டாது.

கேள்வி - எதிர்­வரும் உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலில் முன்னால் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உங்­க­ளுடன் இணைந்து செயற்படுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?

பதில் - கட்டாயமாக மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக கடந்தக்காலங்களில் பிரதேச மற்றும் மாகாண சபையினை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு வகையில் சேவை புரிந்தனர். எனவே ஒரு போதும் அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி துரோகம் செய்ய மாட்டார் என நினைக்கின்றோம் என்றார்.