ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்து இந்திய அணியின் பும்ரா உலக சாதனை

Published By: Vishnu

03 Jul, 2022 | 11:15 AM
image

(என்.வீ.ஏ.)

இங்கிலாந்துக்கு எதிராக எஸ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற உலக சாதனையை இந்திய அணித் தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ரா நிலைநாட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டுவர்ட் ப்றோடின் ஓவரிலேயே 10ஆம் இலக்க வீரரான பும்ரா உலக சாதனையை நிலைநாட்டினார்.

அந்த ஓவரில் 5 வைட்கள், ஒரு நோபோல் உட்பட மொத்தமாக 35 ஓட்டங்கள் (4, 5 வைட்கள், நோபோலில் 6 (7), 4, 4, 4, 6, 1) பெறப்பட்டன.

பும்ரா 29 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்தியத் தீவுகளின் ப்றயன் லாரா ஒரே ஓவரில் குவித்த 28 ஓட்டங்கள் என்ற  டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனையை முறியடித்தார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2004இல் ப்றயன் லாரா நிலைநாட்டிய சாதனை 18 வருடங்களின் பின்னர் பும்ராவால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மென்செஸ்டரில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொவிட் - 19 தொற்று காரணமாக பிற்போடப்பட்டது. அந்தப் போட்டியே 9 மாதங்கள் கழித்து எஜ்பெஸ்டனில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இந்த வருடமும் கொவிட்-19 தொற்றினால் ரோஹித் ஷர்மா பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக அணித் தலைவராக ஜஸ்ப்ரிட் பும்ரா நியமிக்கப்பட்டார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களைக் குவித்தது.

ரிஷாப் பன்ட் 146 ஓட்டங்களையும் ரவிந்த்ர ஜடேஜா 104 ஓட்டங்களையும் குவித்ததோடு 6ஆவது விக்கெட்டில் 222 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதன் மூலம் அந்நிய மண்ணில் 6ஆவது விக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் - மொஹமத் அஸாருதீன் ஆகிய இருவரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 1997இல் நிலைநாட்டிய 6ஆவது விக்கெட் இணைப்பாட்ட சாதனை சமப்படுத்தப்பட்டது.

பன்ட், ஜடேஜா ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகப்பட்ச ஓட்டங்களை பும்றா பெற்றார். பும்ரா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஜேம்ஸ் அண்டர்சன் 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மெத்யூ பொட்ஸ் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஜோ ரூட் 31 ஓட்டங்ளைப் பெற்றதுடன் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 35 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2021க்கான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்துக்கு 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் ...

2024-05-28 19:17:09
news-image

சினா க்ரோன் ப்றீ 400 மீ....

2024-05-28 17:59:53
news-image

தேசிய கராத்தே தெரிவுக்குழு 2024 !

2024-05-28 10:23:17
news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29