நாட்டின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ; காலியில் நிலப்பரப்பிற்குள் புகுந்த கடல்நீர்

02 Jul, 2022 | 07:07 PM
image

நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காலியில் நிலப்பரப்புக்குள் கடல்நீர் புகுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தெஹிவளை, காலி, அம்பலாங்கொடை கடற்பிரதேசங்களில் கடல் கொத்தளிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இன்று (02) மாலை கடல் அலைகள் கரையை நோக்கி வந்ததால் காலி துறைமுக பொலிஸ் சுங்கம் உள்ளிட்ட பல இடங்களுக்குள் கடல் நீர்புகுந்துள்ளது.

கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீனவப் படகுகளும் அலைகளினால் நிலப்பகுதியை நோக்கி இழுத்து வரப்பட்டுள்ளன.

அத்துடன் காலி -மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

சமுத்திர மாவத்தையின் கரையும் சேதமடைந்துள்ளதுடன், நிலவும் பலத்த காற்றுடன் கடல் அலைகள் கரையை நோக்கி பாய்ந்துள்ளன.

இதையடுத்து கொழும்பு முதல் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பரப்பை எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு பயன்படுத்த வேண்டாமென அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right