மணப்பெண்ணின் ஆடைகளை களைந்த மணமகன் நண்பர்கள் ; அதிர்ச்சி வீடியோ வெளியானது

02 Nov, 2016 | 10:40 PM
image

சீனாவில் திருமண வைபவம் ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலையால் மணப்பெண் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு மணமக்கள் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்திருப்பர்.

இந்நிலையில் இதுபோன்று சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணின் உடைகளை அவிழ்த்து விளையாடி இருவரையும் தர்மசங்கட நிலைக்கு தள்ளியுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

குறித்த அந்த வீடியோவில் மணமகனின் நண்பர்கள் மணமகளின் ஆடைகளை அவிழ்க்க முயற்சி செய்யும் வேளையிவ் அவரும் போர்வையால் மறைத்துக் கொள்ள முயலுகிறார்.

மணபெண்ணின் சங்கடத்தை உணர்ந்த மணமகன் தனது நண்பர்களிடம், இப்படி நடந்துகொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கின்றார்.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மணப்பெண்ணின் ஆடைகளை அவிழ்க்க முயற்சி செய்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்