(ஆர்.ராம்)
இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு முன்வரும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு 24மணிநேரத்தில் அனுமதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை போக்குவதற்கான அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை போக்குவதற்கு அர்ப்பணிப்புடன் எனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். அந்த வகையில் நாட்டிற்கு முதலீட்டாளர்களை வரவளைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள.
இதற்காக, இராஜதந்திர மற்றும் ஏனைய துறைசார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, வெளிநாட்முதலீட்டாளர்களை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இலங்கையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் ஊழியர்களுக்கான விசா காலத்தை ஒரேதடவையில் 5வருடங்களுக்கு நீடிக்கப்பட்டதாக வழங்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.
அதற்கான செயற்பாடுகள்,கடந்த வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக அரும்பிக்கப்பட்டு விட்டன. அடுத்த கட்டமாக கடவுச்சீட்டுக்களைப் பெறுவதற்கான ஒருநாள் சேவையானது, நாளை திங்கட்கிழமை முதல் வெளிமாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருகின்ற சர்வேதச முதலீட்டாளர்களுக்கு 24மணிநேரத்தில் முதலீட்டுச் சபையின் அனுமதியை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான அனுமதிகளைப் பெறுமதில் தாமதமான நிலைமைகள் காணப்படுகின்றமை தொடர்பில் என்னிடத்தில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அதனை விரைவுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிப்பட்ட வகையில், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முதலீடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்காக, வருவாயானது நியாயமான, பொறுப்பான மற்றும் திறமையான வழியில் உயர்த்தப்பட்டு செலவிடப்படுவதை உறுதி செய்தவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM