கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு வார நாட்களில் முழுமையாக இயங்கும் - வெளிநாட்டுலுவல்கள் அமைச்சு

By T. Saranya

02 Jul, 2022 | 04:31 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாட்டுலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப்  பிரிவு, ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் என்று ஜூன் 29 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

எவ்வாறிருப்பினும் கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ந்தும் அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இதே வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right