அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்

By T. Saranya

02 Jul, 2022 | 01:31 PM
image

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 7 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படாது என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்திற்குள் 33,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அதன்படி, ஜூலை 6 ஆம் திகதி எரிவாயுவைத் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right