சிறுத்தைப்புலி மானை பிடிக்க முயற்சிக்கும் அரிய காட்சி இலங்கையில் பதிவு

By T. Saranya

02 Jul, 2022 | 01:00 PM
image

சிறுத்தை புலி ஒன்று பெரிய சாம்பார் மானை பிடிக்க முயற்சிக்கும் அரிய காட்சி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சிறுத்தை புலி ஒன்று சாம்பர் மான் ஒன்றை பிடிக்க முயற்சிக்கும் வேளையில் அந்த மான் மிக வேகமாக ஓடி அங்கிருந்து  தப்பித்துச் செல்கிறது.

இந்நிலையில், மானை பிடிக்கும் சிறுத்தையின் முயற்சி தோல்வியடைந்து செல்கிறது.

இந்த காட்சியை பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் இலங்கையின் ஹோட்டன் சமவெளியில் பதிவாகியுள்ளது.

இதேபோன்று, சில நாட்களுக்கு முன்பு யானை ஒன்று தான் செல்லும் வழியில் நின்ற நபரை சத்தம் மிட்டு விலகுமாறி கோரி சென்றுள்ளது.

குறித்த நபரை யானை ஒன்றும் செய்யவில்லை. இந்த அரிய காணொளியும் சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right