உக்ரேனில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் : 21 பேர் பலி

By T. Saranya

02 Jul, 2022 | 11:53 AM
image

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. 

உக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை எட்டி விட்டது. 

உக்ரேனின் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே வருகிறது. 

மறுபுறம் உக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருகின்றன. 

இந்நிலையில், உக்ரேனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.  இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கருங்கடல் பகுதியில் உள்ள ஸ்னேக் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய மறுநாளே ஏவுகணை தாக்குதலை ஒடேசா நகரம் மீது நடத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right