(எம்.எம்.சில்வெஸ்டர்)
எரிபொருள் நெருக்கடி காரணமாக, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறை, போசாக்கான உணவு வகைகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக நாட்டில் சுமார் 60 இலட்சம் பேர் மிகவும் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.
குழந்தைகளின் ஆரோக்கியம், கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் போஷாக்கு, தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம் பாரியளவில் மோசமடைந்துள்ளதாகவும், தற்போது நாட்டில் சுமார் 15 ஆயிரம் இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
" இது மிகவும் ஆபத்தான நிலையாகும். அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை மேலும் மோசமாகும். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நம் நாட்டில் மாதந்தோறும் சுமார் 25-30 இலட்சம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீரிழிவு நோயாளிகள், இருதய நோய் உள்ளவர்கள் மருந்துகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட சுமார் 15 இலட்சம் குழந்தைகள் ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் உள்ள கிளினிக் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
தற்போது குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கிளினிக்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது.
வருடாந்தம் சுமார் 3 இலட்சம் பேர் கர்ப்பிணித் தாயாகிறார்கள். இந்த எரிபொருள் நெருக்கடியால், அவர்களும் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டினால் கர்ப்பிணி தாய்மார்கள் கடுமையான விளைவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் தேவையான ஊட்டச்சத்தான உணவுகளை பெற்றுக்கொள்வதற்கு சிரமப்படுகின்றனர். அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது எதிர்காலத்தில் புரதம் மற்றும் விட்டமின் குறைபாடுகளை ஏற்படுத்தும் " என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM