பிரபு தேவாவின் 'மை டியர் பூதம்' பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

By Digital Desk 5

02 Jul, 2022 | 11:28 AM
image

'நடன புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் 'மை டியர் பூதம்' எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மஞ்சப்பை', 'கடம்பன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் என். ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மை டியர் பூதம்'. இதில் பிரபுதேவா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகை ரம்யா நம்பீசன், நடிகர் இமான் அண்ணாச்சி, குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த், பிக் பொஸ் புகழ் சம்யுக்தா சண்முகம், 'லொள்ளு சபா' சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். குழந்தைகளை கவரும் ஃபேண்டஸி கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை 15 ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பிரபு தேவாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான 'பொன் மாணிக்கவேல்' மற்றும் 'தேள்' ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றியை பெறாததால், கொமர்ஷல் வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரபுதேவா இருக்கிறார். இதற்காக அவர் இந்த முறை குழந்தைகள் விரும்பும் பூதம் வேடத்தை தரித்து நடித்திருக்கிறார்.

அதனால் இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right