சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கும் விதார்த்

Published By: Vishnu

01 Jul, 2022 | 08:03 PM
image

'யதார்த்த நாயகன்' நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். 

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் வில்லன் நடிகருக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் தயாராகும் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான  சைக்கோ திரில்லர் திரைப்படம் இது என்பதால், தொடக்க விழாவின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right