நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தி ஜனாதிபதிக்கு மகாநாக்க தேரர்கள் அவசர கடிதம் 

By T Yuwaraj

01 Jul, 2022 | 07:20 PM
image

22 ஆம் திருத்த சட்டத்தை விரைவாக அமுல்படுத்தி நேர்மையான சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

நாட்டிலுள்ள நான்கு முக்கிய பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 10 அம்ச கேரிக்கை அடங்கிய கடிதமொன்றை எழுதி நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேர்மையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தருணத்தில் கட்சி அரசியலில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மீது குற்றம் சுமத்திய அவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வுகளை காண்பதில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர். 

முறையான பொருளாதாரத் திட்டமிடலில்லாமல் செயற்படும் நிர்வாகத்தின் விளைவாகவே இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right