அதிக விலைக்கு லாப் காஸ் விற்பனை செய்யப்பட்டால் முறையிடவும்

Published By: Vishnu

01 Jul, 2022 | 07:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

லாப் சமையல் எரிவாயுக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில்லறை விலையைவிட அதிக விலைக்கு  விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதனால் இவ்வாறு நிர்ணய விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் உடனடியாக அறியத்தருமாறு லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொர்பாக லாப் காஸ் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

லாப் சமையல் எரிவாயுக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில்லறை விலையைவிட அதிக விலைக்கு லாப் காஸ் சிலிண்டர் விற்பனை செய்து, நுகர்வோரை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் வகையில் முறையற்ற லாபம் உழைப்பது தொடர்பான சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. 

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு லாப் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் இருந்தால், நிறுவனத்தின் நுகர்வோர் சேவை பிரிவின் 1345 என்ற துரித இலக்கத்துக்கு அறியத்தரவும். 12.5 லாப் சமையல் எரிவாயு ஒன்றின் சில்லறை விலை 6850 ரூபாவாகும்.

அத்துடன் சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் தொடர்ந்தும் பல பிரதேசங்களிலும் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனால் நுகர்வோருக்கு விரைவாக சமையல் எரிவாயு கிடைக்கும் வகையில், லாப் சமையல் எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கையை மேலும் விரிவு படுத்தி இருக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32