வவுனியாவில் கள்ளச் சந்தையில் 2500 ரூபாய்க்கு பெற்றோல் விற்பனை

By T Yuwaraj

01 Jul, 2022 | 06:23 PM
image

வவுனியாவில் கள்ளச் சந்தையில் 2500 ரூபாய்க்கு பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு.. இன்றைய விலை நிலவரம்.!! -  Seithipunal

வவுனியாவில் எரிபொருள் விநியோகம் முறையான கட்டமைப்பின் கீழ் இல்லாமையால் எரிபொருள் மாபியாக்கள் பெற்றோலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக பெற்று அதனை 2500 ரூபாய் தொடக்கம் 3000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

எரிபொருள் விற்பனை மாபியாக்களின் செயற்பாடு காரணமாக எரிபொருள் அவசியமானவர்கள் கூட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சீராக சென்று பெற்றோலை பெற முடியவில்லை எனவும், கள்ளச் சந்தை வியாபாரிகள் குறித்த வரிசைகளில் புகுந்து எரிபொருளை பெற்று விற்பனை செய்து வருகின்றனர் எனவும் பொது மக்கள் கூறுகின்றனர்.

பிரதேச செயலகத்தால் ஒன்லைனில் (நிகழ்நிலை) பதிவு இடம்பெறுகின்ற போதும் அது வவுனியா மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தபடவில்லை. இதனால் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வேரே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right