ஒரு வாரத்துக்கு மாத்திரமே 10 வகையான அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் கையிருப்பு 

By Vishnu

01 Jul, 2022 | 05:25 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

10 வகையான அத்தியவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு  ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் எனவும்  சகல வைத்தியசாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் விலங்குகள் கடித்தால் போடப்படும் 'ரேபிஸ் ' தடுப்பூசியின் கையிருப்பும்  போதுமானதாக இல்லை எனவும்  சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியும் இன்னும் ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் எனவும்  அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் 

இந்நிலையில், இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right