வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரே தடவையில் 5 வருடங்களுக்கு விசா - அமைச்சர் தம்மிக்க நடவடிக்கை

Published By: Vishnu

01 Jul, 2022 | 07:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணலாம்.

அத்துடன் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒருநாள் சேவையை வெளி மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டு சபை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு 5வருடங்களுக்கு தொழில் விசா வழங்கும் நிகழ்வு 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை முதலீட்டு சபையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் நூற்றுக்கு 65வீதமானவை இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாகும்.

அதனால் இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், அதில் பணி புரியும் பதவி நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கான விசா காலத்தை 5வருடங்களுக்கு ஒரேதடவையில் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

இதற்கு முன்னர் இவர்கள் தங்களது விசா காலத்தை ஒவ்வோரு வருடமும் புதுப்பிக்கவேண்டி இருந்தது. ஆனால் தற்போது 5வருடங்களுக்கு அவர்களுக்கு விசா வழங்கி இருக்கின்றோம்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் அரசாங்கம் என்றவகையில் நாங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு புதிதாக சிந்தித்து செயற்படுவதை முதலீட்டாளர்கள் உணரவேண்டும்.

அதன் ஆரம்ப நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றாேம்.  முதலீட்டாளர்களை சந்தோசப்படுத்துவதன் மூலமே மேலும் அதிகமான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியும்.

அவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணலாம் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

அத்துடன் 2018 இல் நாட்டுக்குவந்த சுற்றுலா பயணிகளை மீண்டும் கொண்டுவர முடியுமானால் 2.3 மில்லியன் டொலர் எமக்கு கிடைக்கின்றது.

அதனை நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு அந்த டொலர் தொகையை கொண்டுவர நடவடிக்கை எடுத்தால், நாட்டில் தற்போது இருக்கும் பெற்றொல், டீசல், காஸ் வரிசையை இல்லாமலாக்க முடியும்.

மக்கள் வீதிகளில் ஆரம்ப்பாட்டம் செய்துகொண்டு, வரிசைகளில் இருப்பதை காணும்போது சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவதில்லை. அதனால் நாங்கள்  அனைவரும் ஒன்றுபட்டு இதனை செய்யவேண்டும். 

அதேபோன்று வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் நீண்ட வரிசை காணப்படுகின்றது.

இவர்களில் வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதற்கு தேவையான ஆவணங்கள் இருப்பவர்களுக்கு ஒருநாள் சேவையில் அவர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொடுப்பதற்கு தனியான கருமபீடம் ஒன்றை அங்கு ஆரம்பித்திருக்கின்றோம்.

அத்துடன் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவையை நாங்கள் திங்கட்கிழமை முதல் மாத்தறை, கண்டி. வவுனியா மாவட்டங்களில் ஆரம்பிக்கின்றோம். இதன் பின்னர் இந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் கடவுசீட்டு பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவைக்காக கொழும்புக்கு வர தேவையில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:18:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 09:17:07
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23