நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவோம் - அமெரிக்க இராஜாங்க செயலாளர்

Published By: Digital Desk 3

01 Jul, 2022 | 03:59 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் செயலாளர் அன்ரனி ஜே பிளின்கென் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இருவாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருப்பதுடன், இதன்போது பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான தமது கடப்பாட்டை அன்ரனி பிளின்கென் மீளுறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அண்மையகாலங்களில் இந்தியாவிற்கு அடுத்ததாக அமெரிக்கா உதவிகளை வழங்கிவருவதுடன், அமெரிக்காவுடனான உயர்மட்ட சந்திப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன.

குறிப்பாக அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்திருந்ததுடன் நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து அவரிடம் விளக்கமளித்திருந்தார். 

அதனோடு இணைந்ததாகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளிங்கனுடனான சந்திப்பும் இடம்பெற்றிருக்கின்றது.

அதேவேளை அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் மற்றும் அமெரிக்கத்திறைசேரி ஆகியவற்றின் உயர்மட்டப்பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்திருந்ததுடன், நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் இந்நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கு அவசியமான உதவிகள் என்பன தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளின்கென் மற்றும் அவரது பாரியாரும் வெள்ளை மாளிகை அமைச்சரவை செயலாளருமான எவான் ரயன் ஆகியோரை இருவாரங்களுக்கு முன்னர் சந்தித்த இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க அவர்களிடம் நாட்டின் நிலைவரம் தொடர்பில் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17
news-image

சிறப்பு படகுகள் படைப்பிரிவுப் பயிற்சியை நிறைவு...

2026-04-11 14:46:46
news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட...

2026-04-11 14:08:23
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44