(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது 22,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றுலா பயணிகள் 136 நாடுகளில் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய அவுஸ்திரேலியாவில் இருந்து 1,785, கனடாவில் இருந்து 2,295, பிரான்சில் இருந்து 1,310, ஜேர்மனியில் இருந்து 1,883, இந்தியாவில் இருந்து 2,569, ரஷ்யாவில் இருந்து 1,392, இங்கிலாந்தில் இருந்து 2,397, அமெரிக்காவிலிருந்து 1,379 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் உள்ள சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் , தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM