நுவரெலியாவில் இருந்து கொழும்புக்கு மரக்கறிகளை கொண்டுவர விசேட ஏற்பாடு - நுவரெலியா மாவட்ட செயலாளர் 

By Digital Desk 5

01 Jul, 2022 | 02:57 PM
image

நுவரேலியா மாவட்டத்திலிருந்து கொழும்பிற்கு மரக்கறிகளை கொண்டு செல்ல இன்று (01) வெள்ளிக்கிழமை முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெயாவிலிருந்து கொழும்புக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு இராணுவத்தினூடாக எரிபொருளை வழங்கும் புதிய நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான மக்கள் மரக்கறி பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மரக்கறிகளை கொழும்புக்கு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் காணப்பட்ட போதிலும் விவசாயத் திணைக்களமும் விவசாய அமைச்சும் இராணுவத்தினரும் இணைந்து இந்த புதிய நடவடிக்கையினை முன்னெடுத்தமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இதேவேளை இந்த அத்தியாவசிய தேவைக்காக ஒரு வாரத்திற்கு மாத்திரம் எரிபொருள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right