டிக்டொக் செயலியை நீக்குமாறு கூகுள், அப்பிள் நிறுவனங்களிடம் அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையம் வலியுறுத்தல்

By T. Saranya

01 Jul, 2022 | 02:08 PM
image

டிக்டொக் செயலியை நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை அமெரிக்காவின் கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் தகவல் தொடர்பு ஆணையத்தின் (Federal Communications Commission ) குடியரசுக் கட்சி உறுப்பினர் பிரெண்டன் கார் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜூன் 24 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தின் விவரங்களை பிரெண்டன் கார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், வீடியோ பகிர்வு செயலியான டிக்டொக் பீஜிங்கில் உள்ள பைடான்ஸ் நிறுவன ஊழியர்களால் அமெரிக்க பயனர்களைப் பற்றிய பெரிய அளவிலான முக்கியமான தரவுகளை சேகரித்துள்ளது. பைட் டான்ஸ் என்பது டிக்டொக்கின் சீனாவிலுள்ள தாய் நிறுவனமாகும்.

டிக்டொக் என்பது மற்றொரு வீடியோ பயன்பாடு அல்ல. அது செம்மறி ஆடுகளின் ஆடை. பீஜிங்கில் புதிய அறிக்கைகள் அணுகப்படுவதைக் காட்டும் முக்கியமான தரவுகளை இது அறுவடை செய்கிறது என தெரிவித்துள்ளார்.

ஜூலை 8 ஆம் திகதிக்குள் டிக்டொக்கை தங்கள் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்ற வேண்டும் அல்லது ஏன் அவ்வாறு செய்யத் திட்டமிடவில்லை என்பதை விளக்குமாறு நிறுவனங்களை கார் கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right