22 ரயில் சேவைகள் இன்று இரத்து

By T. Saranya

01 Jul, 2022 | 10:00 AM
image

இன்று (ஜூலை 01) திட்டமிடப்பட்ட 22 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 22 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக ரயில்வே ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தால் இவ்வாறு ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகளில் அலுவலக ரயில் சேவையில் ஈடுபடும் சில ரயில்களும் அடங்குவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right