(எம்.எப்.எம்.பஸீர்)
ஐவரை சுட்டுப் படுகொலை செய்த குற்றத்தில், 6 பேறுக்கு மரண தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று ( 30) தீர்ப்பளித்துள்ளது. மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னகோன் இதற்கான தீர்ப்பை அறிவித்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி, கொலைக் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கொன்றுக்கு சென்றுகொண்டிருந்த 5 பேர், மாத்தறை - தெவினுவர விகாரைக்கு அருகே சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 15 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் மாத்தறை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந் நிலையிலேயே, சம்பவம் நடந்து சுமார் 22 வருடங்களில் வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்ட 15 பேரில், வழக்கு விசாரணையிடையே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 5 பேரை நீதிமன்றம் நிரபாராதிகள் என அறிவித்து இன்று விடுவித்தது. இந் நிலையிலேயே குற்றவாளிகளாக காணப்பட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM