குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட  விகாரை கட்டுமான பணி : பொலிசாரிடம் விளக்கம் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

30 Jun, 2022 | 07:59 PM
image

கே .குமணன் 

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந் நிலையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், 16.06.2022 அன்றைய தினம் குருந்தூர்மலை  தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம் மூலம், ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், பொலிஸார் தொடர்ச்சியாக இந்த வழக்கில் நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை  வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அந்தவகையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், பொலிசார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான்,  வழக்குத் தொடுனரான பொலிசார், குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக  23.06.2022  திகதியிட்டிருந்தார் .

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற வழக்கு, மீண்டும்  23.06.2022 அன்று இடம் பெற்றபோது பொலிஸார் இது தொடர்பான பூரணமான விளக்கத்தை அளிப்பதற்கு முடியாத சூழல்நிலையில் இருப்பதாகவும் மேலதிகமாக தமக்கு விளக்கமளிப்பதற்கும்   காலம் தேவை என கோரியிருந்தனர் இதனடிப்படையில் வழக்கு விசாணைகள் இன்றைய  தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது .

இன்று (30) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் முல்லைத்தீவு நீதவான் நீதி மன்ற  நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில்   சிரேஸ்ர சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் கெங்காதரன், பரஞ்சோதி, தனஞ்சயன் உள்ளிட்ட   பலர்   முன்னிலையாகியிருந்தனர் 

இதேவேளை பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதானகே முல்லைத்தீவு  மாவட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றில் சமூகமாகி விளக்கமளித்தனர்.

இரு தரப்பு வாதங்கள் சமர்ப்பணங்களை   அவதானித்த நீதவான், கட்டளைக்காக இந்த வழக்கினை 14-07-2022 ஆம் திகதிக்கு திகதிக்கு ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54