முல்லைத்தீவில் மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ; ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு - மாணவருக்கு பிணை!

Published By: Digital Desk 4

30 Jun, 2022 | 07:25 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை  மாணவிகள்  பலர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும்,  30  ஆம் திகதி இன்று வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்

.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம் பெற்ற நிலையில், ஆசிரியர்  அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மாணவனுக்கு   பிணை வழங்கப்பட்டுள்ளது .

குறித்த (B /645/22) வழக்கு இன்று முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட  சந்தேக நபர்கள்  சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதனாயகமும் சட்டத்தரணி கௌதமனும், பாதிக்கப்பட்ட  மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயனும் முன்னிலையாகியிருந்தனர்   இதன் போது  இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி ஆசிரியரை  14.ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குற்றம் சாட்டப்பட்ட  சந்தேக நபரான விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த மாணவனை ஐந்து இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்லவும் உத்தரவிட்டார் .

இதேவேளை பொலிசாரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு இரண்டு புதிய வழக்குகள் இன்று நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

இதில் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த குற்றச்சாட்டு முண்வைக்கப்பட்ட நிலையில் மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது  மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது  

இதனடிப்படையில் பொலிசாரினால் கற்பழிப்பு குற்றச்சாட்டில் தொடரப்பட்ட (B/685/22) வழக்கு இன்று முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட  சந்தேக நபர்   சார்பில்  சட்டத்தரணி கௌதமனும், பாதிக்கப்பட்ட  மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயனும் முன்னிலையாகியிருந்தனர்   இதன் போது  இருதரப்பு வாதங்களையும் செவி மடுத்த நீதிபதி ஆசிரியரை 07.07.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறும்  பொலிசாரை விசாரணைகளை மேற்கொள்ள அனுமதித்ததோடு  07.07.2022 ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும்  உத்தரவிட்டார் .

அத்தோடு குறித்த ஆசிரியர் 13 வயது பதினோரு மாதங்களை உடைய மாணவி ஒருவரை  கற்பழித்த குற்றச்சாட்டு பொலிசாரிடம்  முண்வைக்கப்பட்ட நிலையில் மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது  மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது  

இதனடிப்படையில் பொலிசாரினால் கற்பழிப்பு குற்றச்சாட்டு சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களில்  தொடரப்பட்ட (B/686/22) வழக்கு இன்று முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட  சந்தேக நபர்   சார்பில்  சட்டத்தரணி கௌதமனும், பாதிக்கப்பட்ட  மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயனும் முன்னிலையாகியிருந்தனர்   

இதன் போது  இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி ஆசிரியரை (07.07.2022) வரை விளக்கமறியலில் வைக்குமாறும்  பொலிசாரை விசாரணைகளை மேற்கொள்ள அனுமதித்ததோடு  07.07.2022 ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும்  உத்தரவிட்டார் .

குறித்த மாணவிகளது புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தியே மாணவிகள் துஸ்ப்பியோக படுத்தப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியருக்கு பாலியல் சார்ந்த நோய்கள் உள்ளனவா என்பது தொடர்பில் பரிசீலிக்குமாறும் பாதிக்கப்பட்ட  மாணவிகள் சார்பில் ஆஜரான  சட்டத்தரணி  மற்றும் பொலிசார் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர் .

முல்லைத்தீவு மாவட்டத்தில்  குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு  பாலியல் சேட்டை புரிந்து  பாலியல்  துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்  .

குறிப்பாக  அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக  நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு  வந்த நிலையில் குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின்   நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டபோது  பல மாணவிகளின்  நிர்வாணமாக  எடுத்துக்கொண்ட வீடியோக்கள்  மாணவிகளின்  நிர்வாணமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மாணவிகளுடன் உடலுறவு கொண்ட  வீடியோக்கள் குறித்த தொலைபேசியில்  இருப்பதை அவதானித்து அதனை சோதித்தபோது அந்த ஆசிரியரும் மாணவர்களும் இந்த செயற்பாடுகளில் தொடர்பு கொண்டிருந்தமை அறியக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக இந்த ஆசிரியர்  மாணவர்களை பயன்படுத்தி மாணவர்களை மாணவிகளோடு காதல் வலையில் விழவைத்து அவர்கள் ஊடாக அந்த மாணவிகளுடைய நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட  பெண்கள் சிலரை விசாரணைக்கு அழைத்து பொலிசார்  அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இரு மாணவிகளை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

இவ்வாறான பின்னணியில் குறித்த ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில் அந்த ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொலிசார் கைது செய்திருந்தனர்.

சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய இந்த ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது மாணவர் ஒருவர்  எதிர்வரும் 30.6.2022 (இன்று) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்  இவ்வாறான பின்னணியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் 23.06.2022 சட்டத்தரணி வி.கௌதமன்  ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார் .

இந்த வேளையில் இந்த பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக மன்றில் தோன்றிய சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் குறிப்பாக இந்த செயற்பாடு தொடர்பில் நீதி மன்றத்தை தெளிவுபடுத்தி இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும்  பல்வேறு மாணவிகளை  துஷ்பிரயோகம்  மேற்கொண்டதோடு பல பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தி உள்ளதையும் எடுத்துக் கூறி இது பொது மக்களிடையே  பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது இது ஒரு சமூகப் பிரச்சனை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த  சம்பவத்தின்  பாரதூர தன்மையை  நன்கு அவதானித்த முல்லைத்தீவு நீதிமன்றத்தின்  நீதிபதி ரி.சரவணராஜா குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியன்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த...

2025-12-07 09:45:56
news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 08:31:11
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52