மத்திய வங்கியின் பிணை முறி வழங்களின் போது ஏற்பட்ட நிதி மோசடி 10000 பில்லியனுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே மக்கள் பணத்தினை மோசடி செய்தமைக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அரஜுன மகேந்திரனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்ய வேண்டுமென்  கூட்டு எதிர்கட்சி வலியுறுத்துகின்றது. 

அதேநேரம் பேபர்ச்சுவல் நிறுவனத்தின் சகல செயற்பாட்டாளர்களையும் முடக்கி அந்நிறுவனத்தையும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பு என்.எம் பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அதன் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.