கத்தார் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை நீக்கம் - காஞ்சன

By T. Saranya

30 Jun, 2022 | 04:12 PM
image

கத்தாரை சேர்ந்த தொண்டு நிறுவனமொன்றின் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது என அமைச்சர் காஞ்சனவிஜயசேகர கத்தாரில் தெரிவித்துள்ளார்.

கத்தாரை சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தேன், 2019இல் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதை தெரிவித்தேன் என அமைச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரத்தின் போது அரசாங்கம் கட்டார் தொண்டு நிறுவனம் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு நிதி வழங்கும் அமைப்பு என தெரிவித்திருந்ததுடன் பயங்கரவாதத்திற்கு அந்த அமைப்பு உதவியது என்ற அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right