1,900 லீற்றர் எரிபொருளுடன் நபர் ஒருவர் கைது

By Vishnu

30 Jun, 2022 | 04:18 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பதுளை- கிரந்துருகோட்டையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  1,900 லீற்றர் எரிபொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 29 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக  கிரந்துருகோட்டை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரந்துரகோட்டை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொண்டுள்ள பட்ட சுற்றிவளைப்பில்  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய ஒருவர் என்றும்  சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான  1,900 லீற்றர் டீசல் மற்றும் 19 லீற்றர் பெட்ரோல் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிரந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right