பாரிய தொழில்துறைகள் மீது பாக்கிஸ்தானின் செஹ்பாஸ் செரீவ் அரசாங்கம் பத்துவீத வரிவிதிப்பினை அறிவித்த பின்னர் பாக்கிஸ்தானின் பங்குசந்தை கடந்த வாரம் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது.
இந்த நடவடிக்கை மூலம் பாக்கிஸ்தான் வங்குரோத்து நிலையை அடைவதை தவிர்க்கமுடியும் என தெரிவித்தே பிரதமர் இதனை அறிவித்திருந்தார்.
11.40 மணியளவில் கேஎஸ்ஈ-100 பாரிய வீழ்ச்சியை சந்தித்ததுடன் 1598 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது 41,00 என்ற நிலைக்கு சென்றது என டோவ்ன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தானின் பங்குசந்தை விதிமுறைகளின்படி சுட்டெண் ஐந்துவீதம் அதிகரித்தால் அல்லது குறைந்தால் இந்த நிலை ஐந்து நிமிடம் தொடர்ந்து நீடித்தால் குறிப்பிட்ட நிமிடத்திற்கு பங்கு சந்தை வர்த்தகம் நிறுத்தப்படும்.
இன் ராஜாசெரீவ் பாரிய வரிகளே இதற்கு காரணம் என குற்றம்சாட்டினார்,பெரும்நிறுவனங்களின் இலாபத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பங்குசந்தை எதிர்மறையான விதத்தில் பதிலளித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
பாரியதொழில்துறை நிறுவனங்கள் மீது பத்துவீத வரியை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த பாக்கிஸ்தான் பிரதமர் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
சீமெந்து சீனி எண்ணெய் எரிவாயு உட்பட பல பொருட்களின் மீது சுப்பர்வரி விதிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
150 மில்லியன் ரூபாய் சம்பாதிப்பவர்கள் மீது ஒருவீத வரியும்,200 மில்லியன் சம்பாதிப்பவர்கள் மீது இரண்டுவீத வரியும் 250 மில்லியன் உழைப்பவர்கள் மீது 3 வீத வரியும் விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அடுத்தவருட வரவுசெலவுதிட்டத்தை அடிப்படையாக கொண்ட கடுமையான நடவடிக்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிற்கு இது குறித்தும் நாட்டின் உண்மையான நிலை குறித்தும் தெரிவிக்க விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதும் பணவீக்க சுமையை குறைப்பதும் எங்களின்முதல்நோக்கம் நாடு வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பது எங்களின் இரண்டாவது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM