61 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது மக்கள் வங்கி

By Vishnu

30 Jun, 2022 | 03:55 PM
image

இலங்கையின் வங்கி மற்றும் நிதித்துறையின் புதியதோர் மைல்கல்லினைக் கடந்துள்ள மக்கள் வங்கியானது நிறுவப்பட்டு ஜூலை 1 ஆம் திகதியன்று, 61 ஆண்டு காலம் பூர்த்தியாகின்றது.

இந்நாட்டு சாதாரண பொது மக்களுக்கு வங்கியியலை பழக்கப்படுத்தியதும் மக்கள் வங்கியே ஆகும்.

தமது 61ஆவது ஆண்டினை பூர்த்தி செய்திடும் இவ்வேளையில் டிஜிட்டல் நிதிச் சேவைகளை இந்நாட்டு கிராமங்களுக்கும் வியாபிக்கச் செய்து டிஜிட்டல்மயமாக்கலின் அனுகூலங்களை முழு நாட்டுக்கும் பெற்றுக் கொடுப்பதில் முன்னோடியாய்த் திகழுவதுடன் தேசத்துக்கு அபிமானத்துடன் இந்நாட்டு சமூக, பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்குதலும் மிகவும் முக்கியமான விடயமாகும்.

இலங்கையின் கூட்டுறவு வியாபாரம், கிராமிய வங்கி முறைமை மற்றும் கிரரமிய மக்களின் வாழ்வினை கட்டியெழுப்பிடும் நோக்கத்துடன் 1961, 29ஆம் இலக்க சட்டத்தின் கீழ் மக்கள் வங்கி நிறுவப்பட்டது. கௌரவ பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சியின் போது, அப்போதைய அரசின் வியாபாரம், உணவு, கூட்டுறவு மற்றும் கடற்படை விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த கௌரவ. டீ. பீ. இலங்கரத்ன அவர்களால் அச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதே போல் அப்போதைய காலகட்டத்தில் கூட்டுறவு துறைக்கு பாரிய சேவைகளைப் புரிந்து வந்த வின்சன்ட் சுபசிங்ஹ அவர்கள் மக்கள் வங்கியின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கற்றோருக்கும் வசதியானோருக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வங்கிமுறைமை மக்கள் வங்கியின் தோற்றத்துடன் மாற்றப்பட்டது. அதன் விளைவாக, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வங்கியாகவும் மக்கள் வங்கி விளங்குகிறது. 

அதே போல் ஆரம்ப காலகட்டத்தில் கமத்தொழில், தோட்டத்துறை பொருளாதாரம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகள் மற்றும் அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள வெவ்வேறுபட்ட கடன் வசதித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. சாதாரண மக்களை சேமிப்புப் பழக்கத்திற்கு ஊக்குவித்திடவும் அதே வேளை தங்க நகை அடகுச் சேவை நடவடிக்கைகளுக்கும் மக்கள் வங்கி 1963ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது.

அரச வங்கியொன்றின் பாதுகாப்புடன் சாதாரண வட்டி வீதங்களுடன் தங்க நகை அடகுச் சேவைகள் செயற்படுவதால் அதுவரையில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட தங்கநகை விற்பiசை; சந்தை சரியான முறையில் செயற்படத்தொடங்கியது. 

இன்று மக்கள் வங்கியானது 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான சொத்துப் பெறுமதியைக் கொண்டுள்ள இலங்கையின் மிகப் பெரிய நிதி நிறுவனமாகும். நாடு முழுவதும் 743 கிளைகளுடன் வியாபித்திருக்கும் மக்கள் வங்கி, நாடு முழுவதும் 268க்கும் அதிகமான மக்கள் வங்கி சுய வங்கிச்சேவை அலகுகளையும் கொண்டுள்ளது.

அவற்றினூடாக வருடத்தின் 365 நாட்களும், கிழமையின் 7 நாட்களும், நாளாந்தம் 24 மணி நேரமும் வங்கிக் கிளையொன்றுக்குச் செல்லாமலேயே மிகவும் இலகுவாக மற்றும் வினைத்திறன் மிகு வங்கி அனுபவத்தினைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 14 மில்லியனுக்கும் அதிகமான மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் கொண்டுள்ளதுடன் இது இலங்கையில் ஓர் வணிக வங்கி கொண்டுள்ள மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர் எண்ணிக்கையாகும். இவ்வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக 8000க்கும் அதிகமான ஊழியர்களையும் மக்கள் வங்கி தம்மகத்தேக் கொண்டுள்ளது. 

வேறுபட்ட வயதுப் பிரிவுகளிலும், வேறுபட்ட தரங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான கணக்குகளை வெவ்வேறு பெயர்களில் அறிமுகப்படுத்திட மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வெவ்வேறு கடன்வசதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமது வாடிக்கையாளர்களுக்கு உயர் வாழ்க்கைத் தரத்தினை பெற்றுக் கொடுத்திடவும், வியாபார அபிவிருத்திக்குத் தேவையான சக்தியை வழங்கிடவும் மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

தனிநபர் கடன் வசதி, வீட்டுக்கடன் வசதி, தொழிற் கடன்கள், கல்விக்கடன்கள், வாகனக் கடன்கள் போன்றவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும். அதே போல் விவசாயிகள், மீனவ சமூகத்தினர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகள் போன்றோரை கட்டியெழுப்பிட வேறுபட்ட கடன் வசதித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அதே போல் மக்கள் வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு நவீன உலகுக்கு ஏற்ற வகையிலான மிகவும் வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் மிக்க வங்கிசேவைகளைப் பெற்றுக் கொடுத்திடும் நோக்கத்துடன் 2015ஆம் ஆண்டு டிஜிட்டல் வங்கிச்சேவைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

அதனடிப்படையில் வங்கியின் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை அனைத்து செயற்பாட்டு பிரிவுகளும் உள்ளடங்கிடும் வகையில் முழுமயான டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட திட்டமொன்று நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுத்துள்ள இலங்கையின் முதலாவது வங்கியாகவும் மக்கள் வங்கி விளங்குகிறது. 

மக்கள் வங்கிக்கு சர்வதேச வங்கிகளுடனும் மற்றும் நிதிச் சேவை துறைகளுடனும் உயர் தரத்திலான சேவைகளை வழங்கிடக்கூடியதாக உள்ளதுடன் தமது டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாடுகளுக்கு தற்போது உலகிலுள்ள மிகவும் நவீனமான தொழிநுட்ப தளத்தினை மக்கள் வங்கி பயன்படுத்துகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை செயற்பாடுகளில் பிரதான உற்பத்தியாக “People’s Wiz”  விளங்குகிறது. இதன் மூலம் வங்கிக்குச் சென்று கணக்கொன்றினை ஆரம்பித்திடும் பாரம்பரிய முறைக்கு அப்பாற்பட்டு, கடதாசி பாவனையற்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வங்கிக் கணக்கொன்றினை 10நிமிடங்களில் மிகவும் இலகுவாக ஆரம்பித்துக் கொள்ள முடியும். 

இந்த டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாட்டின் கீழ் வங்கிச் சேவைகளை நாளின் எவ்வேளையும் வங்கிக் கிளைக்குச் செல்லாமல் தங்களது மொபைல் தொலைபேசியின் மூலம் செய்துகொள்ள வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில்; “People’s Wave Mobile Banking App”  வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், நாட்டில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட நிதிச் சேவை App ஆகவும் இது விளங்குகிறது. 

அதே போல் மக்கள் வங்கி தமது டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாட்டின் இன்னுமொரு பிரதான உற்பத்தியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிநபரக் கடன் மற்றும் நிறுவன ரீதியான கடன்களை 24 மணிநேரத்தினுள் பெற்றுக் கொடுத்திடும் நோக்கத்துடன்  “People’s Wiz Credit”  இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு மேலதிகமாக “Peopl’s Wyn”  என்ற பெயரில் நிறுவன ரீதியான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வோருக்காகவே விஷேடமான மொபைல்  App ஒன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல்  “People’s Web”  என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டில் இணைய வங்கிச் சேவையைப் பெற்றுக் கொடுத்தது. இவ்வசதி தனிநபர் மையப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு “People’s Web Personal” என்ற பெயரிலும் நிறுவன ரீதியான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வோருக்காக “People’s Web Corporate” என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதே போல் பொறுப்புள்ள நிதி நிறுவனம் என்ற வகையில் மக்கள் வங்கி நிலைத்திருதன்மை கொண்ட எதிர்காலம் தொடர்பான தங்கள் எதிர்ப்பார்ப்புக்களை அடைந்திடும் வழிகளை ஏற்படுத்திக் கொடுத்திட “People’s Green Pulse”  என்ற பெயரில் வளமானதோர் சூழல் கொள்கையினையும் செயற்படுத்தியது. 

மக்கள் வங்கி தமது உன்னதத் தன்மைக்கு பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளை வென்றுள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் மற்றும் நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து வழங்கிடும் மக்கள் விருதினை தொடர்ந்தும் 15 ஆவது ஆண்டிலும் பெற்றுக் கொண்டுள்ளது. சர்வதேச தரப்படுத்தல்களில் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்காக ISO/IEC 27001:2013  தரச்சான்றிதழினைப் பெற்றுள்ளது. இச்சான்றிதழைப்பெற்ற இலங்கையின் முதலாவதும், ஒரே வங்கியாகவும் மக்கள் வங்கி விளங்குகிறது. 

அதே போல் மக்கள் வங்கி தமது பயணத்தில் இன்னும் பல விருதுகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் மட்டும்  Asian Banker Excellence in Retail Financial Services Award, Asia Money Best Bank, World Finance, International Business Magazine போன்ற விருது வழங்கும் வைபவங்களில் மக்கள் வங்கி விஷேட விருதுகளையும் வென்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக  The Banker  சஞ்சிகையினால் 2021, 2020, 2019 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மக்கள் வங்கி உலகின் சிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாக இடம்பிடித்திருந்தது. இலங்கையின் சர்வதேச வர்த்தக சபை, பட்டயக் கணக்காளர் நிறுவகம் மற்றும் Daily FT சஞ்ஜிகை ஆகியோரால் 2021,  2020, 2019 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தொடர்ந்தும் இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பெருமைமிகு 10 நிறுவனங்களுள் ஒன்றாக பரந்துரைக்கப்பட்டிருந்தது. 

அறுபத்தொரு ஆண்டு காலமாக அனைத்து இலங்கையர்களையும் வலுவூட்டி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சௌகரியத்தினை மேம்படுத்தி, நவீன வங்கித் தீர்களை வழங்கி, அவர்களது வாழ்வுக்கு மேலும் பெறுமதி சேர்த்து, இந்நாட்டு மக்களின் வங்கி என்ற உயர் நிலையையும் நம்பிக்கையையும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு நிலைத்திருப்பதே மக்கள் வங்கியின் எதிர்ப்பார்ப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right