வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

By Vishnu

30 Jun, 2022 | 03:17 PM
image

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை காணாமல்போனாரின் அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கும் ஆட்சேபனை தெரிவித்திருந்த போராட்டக்காரர்கள் ஐ.நா.விற்கு கண்துடைப்புக்காக இவ்வாறு கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right