வீதி­களில் எரி­பொ­ரு­ளுக்­காக திண்­டாடும் மக்கள் நீண்­ட­கால மறு­சீ­ர­மைப்பு திட்­டங்கள் எங்கே ?

By T. Saranya

30 Jun, 2022 | 02:38 PM
image

ரொபட் அன்­டனி

வரி­சைகள்,  காத்­தி­ருத்தல், ஏமாற்­றங்கள், பொரு­ளா­தார பிரச்­சி­னைகள்,  பாட­சாலை ஸ்தம்­பிதம், வர்த்­தக செயற்­பா­டுகள் பாதிப்பு, மின்­வெட்டு நெருக்­கடி, தொழிற்­சா­லை­களின் நட­வ­டிக்­கைகள் பாதிப்பு, போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பிதம், எரி­பொருள் பற்­றாக்­குறை, எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு, உணவுப் பொருட்­களின் விலை அதி­க­ரிப்பு, அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை உயர்வு என நாட்டில் பல்­வேறு நெருக்­க­டிகள் தினந்­தோறும் காணப்­ப­டு­கின்­றன.  மக்கள் தமது வாழ்க்­கையை ரண­க­ள­மா­கவே கடக்க வேண்­டிய ஒரு துர்ப்­பாக்­கிய நிலைமை தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  வரி­சை­களை பார்க்­கும்­போது மக்கள் எதிர்­கொள்­கின்ற அந்த வேதனை மிகவும் ஒரு துர­திஷ்­ட­வ­ச­மான நிலை­மையை எடுத்துக் காட்­டு­கி­றது.  நாடு எங்கே சென்று கொண்­டி­ருக்­கி­றது.  மக்­களின் நிலை என்ன?   மக்கள் மூன்று வேளை உணவு உண்டு வாழும் நிலைமை இப்­போது மீண்டும் வரும். எப்­போது மீண்டும் பழைய நிலைமை ஏற்­படும் போன்ற கேள்­விகள் மக்­களின் முகத்தில் பிர­தி­ப­லித்து கொண்டே இருக்­கின்­றன.

இதற்­கி­டையில் 51 பில்­லியன் கடன் சுமையில் நாடு தத்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.  வருடம் ஒன்­றுக்கு ஆறு பில்­லியன் டொலர்­களை கடன் தவணை பண­மாக செலுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.  அதேபோன்று ஏற்­று­மதி வரு­மா­ன­மாக 12 பில்­லியன் டொலர்­களே பதி­வா­கின்­றன.  ஆனால் இறக்­கு­மதி செல­வா­னது 22 பில்­லியன் டொலர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.  சுற்­று­லாத்­துறை ஊடான  டொலர் வருகை  பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  

வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­கின்ற இலங்­கை­யர்கள் அனுப்­பு­கின்ற டொலர் வரு­கையும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருக்­கி­றது.  அதே­போன்று வெளி­நாட்டு நேரடி முத­லீ­டு­களும்   பாதிக்­கப்­பட்­டுள்­ளன.  புதிய கடன்­களை பெற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  இலங்கை வங்­கு­ரோத்து நிலை என்ற விடயம் உத்தியோ­க­பூர்­வ­மாக  பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் கடன்­களை பெற்றுக் கொள்ள முடி­யாத நிலைமை ஏற்­பட்டிருக்­கின்­றது.   ஒரு மிகப்­பெ­ரிய நெருக்­க­டிக்குள் சிக்­க­லுக்குள் இலங்கை தத்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.  

மறு­புறம் இந்த பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வ­தற்­காக அர­சாங்கம் பல்­வேறு தரப்­பி­ன­ருடனும்  பேச்­சு­வார்த்தை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றது.  இந்­தி­யாவில் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தையின் ஊடாக இது­வரை 2.4 பில்­லியன் டொலர்கள் இலங்­கைக்கு கிடைத்­தி­ருக்­கின்­றன.  அதே­போன்று சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.   கடன் மறு­சீ­ர­மைப்­புக்­களை  செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  அதற்­காக சர்­வ­தேச ஆலோ­சனை முக­வர்கள்  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.  

மேலும் வெளி­நா­டு­களில் பணி புரி­கின்­ற­வர்கள் இலங்­கைக்கு அனுப்­பு­கின்ற டொலர்­களை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு அவற்றை சட்ட ரீதி­யான முறையில் பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.   கடந்த தினங்­களில் கூட எரி­சக்தி அமைச்சர்  கட்­டா­ருக்கு விஜயம் செய்து  எரி­பொருள் துறை அமைச்­ச­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இருந்தார்.  இரண்டு அமைச்­சர்கள் ரஷ்­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்டு எரி­பொ­ருளை பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்­பது தொடர்­பாக ஆராய்ந்­தி­ருந்­தனர்.   இவை நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள்­வ­தற்­கான நகர்­வு­க­ளா­க­வுள்­ளன.  

எனினும் நீண்ட காலத்­திலும் இந்த டொலர்  பிரச்­சினையை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய அவ­சியம் காணப்­ப­டு­கி­றது. தற்­போது இந்த டொலர் நெருக்­க­டியை எதிர் கொள்­வ­தற்கு குறு­கிய காலத்தில் சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.  அத­னூ­டா­கவே தற்­போது இந்த நெருக்­க­டியை சமா­ளிக்க முடியும்.  ஆனால் நீண்ட கால திட்­டங்­களின் ஊடா­கவே அடுத்து வரும் காலங்­களில் இந்த பிரச்­சினைகள் வரா­த­வாறு பார்த்துக் கொள்ள முடியும்.  தற்­போது குறு­கிய திட்­டங்­க­ளுடன் இந்த நெருக்­கடி தீர்ந்­தாலும்     ஆறு மாதங்­களின் பின்னர் மீண்டும் நெருக்­கடி ஏற்­பட்­டு­விடும்.  

எனவே எதிர்­வரும் காலங்­களில் இந்த நெருக்­க­டியை நிரந்­த­ர­மாக சமா­ளிக்கும் வகை­யி­லான வேலைத்­திட்­டங்கள் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.  அதற்­கான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது மிக அவ­சி­ய­மாக இருக்­கின்­றது.  முக்­கி­ய­மாக பல துறை­களில் நீண்­ட­கால ஆழ­மான ஆற்­றல்­மிக்க மறு­சீ­ர­மைப்­பு­களை செய்ய வேண்­டிய அவ­சியம் காணப்­ப­டு­கி­றது.   மிக தீர்க்­க­மா­ன­தாக இலங்­கையின் ஏற்­று­மதி வரு­மானம் காணப்­ப­டு­கி­றது.  ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்.  ஏற்­று­மதி வரு­மா­னத்தின் மூலக்­கூ­றுகள் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு அவற்­றுக்­கான மதிப்­பீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு அதனை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பது கட்­டாயம்.  

ஏற்­று­மதி வரு­மா­னத்தை பொறுத்­த­வ­ரையில் இலங்கை   வருடம் ஒன்­றுக்கு 12 பில்­லியன் டொலர்­களை பெற்றுக் கொள்­கின்­றது.  10 முதல் 12 பில்­லியன் டொலர்கள் கிடைப்­ப­தாக புள்ளி விப­ரங்கள் கூறு­கின்­றன.  அது போது­மா­னது அல்ல.  காரணம் இலங்­கையின் இறக்­கு­ம­தி­யா­னது 22 பில்­லி­யன்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.  எனவே ஏற்­று­மதி வரு­மானம்  கிட்­டத்­தட்ட 15 பில்­லியன்  டொலர்­களை நெருங்­க­வேண்டும்.  அப்­போ­துதான்   இந்த பிரச்சினையை சமா­ளிக்க முடியும்.  எனவே ஏற்­று­மதி வரு­மா­னத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக மேற்­கொள்­ளப்­பட வேண்டும். முக்­கி­ய­மாக தேயிலை துறை ஊடாக கிடைக்கும் வரு­மா­னம்  இரண்டு பில்­லியன் டொலர்­களை தாண்ட வேண்டும். அதே­போன்று ஆடைத்­து­றையில்   ஐந்து பில்­லியன் டொலர்கள் கிடைக்­கின்­றன.  அதனை ஆறு பில்­லியன் டொலர்­க­ளாக உயர்த்­து­வ­தற்­கான திட்­டங்கள் அவ­சி­ய­மாகும்.  அது­மட்­டு­மின்றி மேலும் ஏற்­று­மதி பொருள் உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை அவ­சி­ய­மா­கின்­றது.  கட­லு­ணவு ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க முடியும்.   அடுத்­து­வரும் வரு­டங்­களில் 15 பில்­லியன் டொலர்­களை ஏற்­று­மதி வரு­மானம் ஊடாக வரு­ட­மொன்­றுக்கு பெற்றுக் கொள்­வதை இலக்­காக எடுத்­துக்­கொள்­வது இங்கு மிக முக்­கி­ய­மாகும்.    அது­மட்­டு­மன்றி ஏற்­று­மதி உற்­பத்தி பொருட்­களை மேற்­கொள்­ப­வர்­க­ளுக்கு வரி சலு­கையை வழங்­கு­வ­துடன் மூல­தன உத­வி­களை செய்­யலாம்.  உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­தலாம்.  ஏற்­று­ம­தியை ஊக்­கு­விப்­ப­தற்­கான திட்­டங்கள் ஊடாக மட்­டுமே   அதனை அதி­க­ரிக்க முடியும்.  அதனால் அது  தொடர்பில் நீண்­ட­கால திட்­டங்கள் அவ­சி­ய­மா­கின்­றன.  

அதே­போன்று அடுத்து மிக முக்­கி­ய­மா­ன­தாக இறக்­கு­மதி பதி­லீ­டுகள் தொடர்­பாக ஆராய்­வது முக்­கி­ய­மாகும்.    ஏற்­று­மதி இறக்­கு­மதி பிரச்­சி­னைக்கு தீர்­வாக இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்­து­வது ஒரு தீர்­வாக அமை­யாது என்­பது சக­ல­ருக்கும் தெரியும்.  காரணம் இறக்­கு­மதி  செய்­கின்ற போதுதான்  ஏற்­று­ம­திக்­கான  நட­வ­டிக்கை ஆற்றல் மிக்­க­தாக இருக்கும்.   எனவே இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.  ஆனால்  இறக்­கு­மதி பதி­லீட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியும்.   உதா­ர­ண­மாக இறக்­கு­மதி செய்­கின்ற பொருட்­களில் இலங்­கையில் உற்­பத்தி செய்­து­கொள்ள கூடி­ய­வற்றை இங்­கேயே உற்­பத்தி செய்து கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கலாம்.  அத­னூ­டாக இறக்­கு­ம­திக்கு அதிக டொலர்கள் வெளிச் செல்­வதை கட்­டுப்­ப­டுத்த முடியும்.

குறிப்­பாக மீன் இறக்­கு­மதி, பால்மா இறக்­கு­மதி போன்­ற­வற்றை கட்­டுப்­ப­டுத்தி அவற்றை உள்­நாட்டில் உற்­பத்தி செய்ய முடியும்.  அத்­துடன் மரக்­கறி வகை­களை உள்­நாட்டில் அதி­க­ளவில் உற்­பத்தி செய்­யலாம்.    உணவுப் பொருட்­களை அதி­க­ளவில் இறக்­கு­மதி செய்­யாமல் அவற்றை உள்­நாட்டில் உற்­பத்தி செய்ய முடியும்.  இது போன்ற பொருட்­களை இறக்­கு­மதி செய்­வதை தவிர்க்கும் பட்­சத்தில் நிச்­ச­ய­மாக டொலர்கள் வெளிச் செல்­வதை குறைக்­கலாம்.  தற்­போது 22 பில்­லியன் டொலர்­க­ளாக காணப்­ப­டு­கின்ற இறக்­கு­மதி செலவை நிச்­ச­ய­மாக 19 பில்­லியன் வரை குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கலாம்.  அதா­வது இறக்­கு­மதி பதீ­லீடு என்­பது ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாக காணப்­ப­டு­கி­றது. இது  ஒரு சிறந்த வியா­பார உத்­தி­யாக இருக்­காது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.    ஆனால் தென் கொரியா மலே­ஷியா போன்ற நாடுகள் இதில் பாரி­ய­ளவில் நன்­மை­ய­டைந்­தி­ருக்­கின்­றன.  

அடுத்த மிக முக்­கிய  டொலர் வருகை மூல­மாக சுற்­று­லாத்­துறை காணப்­ப­டு­கி­றது.  அதா­வது 2018 ஆம் ஆண்டு சுற்­று­லாத்­துறை வரு­மா­ன­மாக 4.4 பில்­லியன்  டொலர்கள் கிடைத்­தன,   அதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கார­ண­மாக தற்­போது 500  மில்­லி­யன்­க­ளுக்கும் குறை­வான டொலர்­க­ளை‍யே சுற்­றுலா  வரு­மா­ன­மாக பெற்றுக் கொண்­டி­ருக்­கின்றோம்.  அதனை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.  அதனை அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் துரித கதியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது மிக அவ­சி­ய­மாகும்.  முக்­கி­ய­மாக சுற்­றுலா துறையை கவர்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்கள் உரிய முறையில் செயற்தி­ற­னாக  முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தீர்க்­க­மா­ன­தாக இருக்­கின்­றது.  இலங்­கையில் இருக்­கின்ற சுற்­றுலா தலங்­களை வெளி­நா­டு­களில் பிர­சாரம் செய்­வது மட்­டு­மின்றி சுற்­றுலா பய­ணி­களை கவர்­வ­தற்­கான இலக்­கு­களை வெளி­நாட்டு தூத­ர­கங்­க­ளுக்கு வழங்­குதல் போன்ற வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும்.  6 பில்­லி­யன்­களை கடந்து வரு­மானம் பெற முடியும்.  

அடுத்த மிக முக்­கி­ய­மான ஒரு டொல‍ரை கொண்டு வரு­வ­தற்­கான மூல­மாக வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­கின்ற இலங்­கை­யர்கள் அனுப்­பு­கின்ற அந்­நிய செலாவணி காணப்­ப­டு­கி­றது.  இது வருடம் ஒன்­றுக்கு ஏழு பில்­லி­யன்கள் வரை வந்து கொண்­டி­ருந்­தது.  ஆனால் 2021 ஆம் ஆண்டு ஐந்து பில்­லி­யன்­க­ளாக குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது.  அதே­போன்று இந்த வரு­டமும் இன்னும் அது குறை­வ­டையும் சாத்­தி­யத்தை கொண்­டுள்­ளது.   அதனை அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள்   எடுக்­கப்­பட வேண்டும்.  மக்கள் சட்­ட­ரீ­தி­யான வழியில் அந்த டொலர்­களை இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்­கான     நட­வ­டிக்­கைகள் சரி­யான முறையில்  எடுக்­கப்­ப­ட­வேண்டும். வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­கின்ற இலங்­கை­யர்கள் சரி­யான முறையில் இலங்­கைக்கு  டொலர்­களை அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்கை‍யை எடுக்க வேண்டும். அதே­போன்று வெளி­நாட்டு நேரடி முத­லீ­டு­களை கவ­ரு­வ­தற்­கான வேலை திட்டம் அவ­சி­ய­மாகும்.  ஒற்றை ஜன்னல் என்ற ஒரே அறையின் கீழ் வெளி­நாட்டு நேரடி முத­லீட்­டா­ளர்கள் இலங்­கையில்  இல­கு­வாக முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்­கான வேலை திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.   புதிய முத­லீ­டு­களை இலங்­கையில் கவ­ரு­வ­தற்­கான ஊக்­கு­விப்­புக்­களை வெளிப்­ப­டுத்­து­வதும் இன்­றி­ய­மை­யா­தது.  

இவ்­வாறு பல்­வேறு  நீண்­ட­கால வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்­வதன்  ஊடாக டொலர் வரு­கையை அதி­க­ரித்­துக்­கொள்­வது அவ­சி­ய­மா­கின்­றது.  காரணம் குறு­கிய கால திட்­டங்­களை போன்று   நீண்­ட­கால திட்­டங்­களும் இந்த டொலர் வரு­கையை  அதி­க­ரிப்­பதில் மிக முக்­கி­ய­மான பங்கு வகிக்­கி­ன்றன.  எனவே அது தொடர்­பாக கவனம் செலுத்­த­வேண்டும்.  நீண்­ட­கால திட்­டங்­களே  எப்­போதும் ஒரு நாட்­டுக்கு பயன் கொடுப்­ப­தாக அமையும்.  கடந்த காலங்­களில் இந்­தியா, மலே­சியா, தென்­கொ­ரியா போன்ற பல்­வேறு நாடு­களை பார்க்­கும்­போது அவர்கள் ஒரு கட்­டத்தில் தமது பொரு­ளா­தா­ரத்தை மறுசீரமைப்பு செய்து நீண்டகால திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள்.  90 களில் பல நாடுகளில் முக்கியமாக கிழக்காசிய நாடுகளில் பாரிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.    அந்த நாடுகளுக்கு அந்த நீண்டகால மறுசீரமைப்புக்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் இன்று பாரியதொரு நன்மையைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்து இருக்கின்றன.  பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.  இந்தியாவில் 90 களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின்  ஊடாக இன்று அந்த நாடு 600 பில்லியன் டொலர்களை கையிருப்பாக வைத்திருக்கிறது.  1991ஆம் ஆண்டு இரண்டு வாரங்களுக்கு பெறுமதியான டொலர்  கையிருப்பே இருந்திருக்கிறது.  ஆனால் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார திட்டங்களின் ஊடாக இன்று முன்னேற்றம் அடைந்திருக்கிறது.  அதேபோன்று கொரியா, மலேசியா போன்ற நாடுகளும் பாரிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு நீண்டகால திட்டங்களை முன்னெடுத்து இந்த நிலைமைக்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன.  

சர்வதேச நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை  மேற்கொண்டு  இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதும் முக்கியமாகின்றது. அதனால் நீண்டகால பொருளாதாரத்தை நோக்கி உடனடியாக வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய கட்டத்தில் இலங்கை இருக்கிறது.  தீர்மானம் எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் என்ன  செய்யப் போகிறார்கள்?  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right