வசீம் தஜூடீனின் கொலை தொடர்பான தகவல்களை மூடிமறைத்தமை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.