(இராஜதுரை ஹஷான்)
வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 30 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.85 சதவீதத்தினால் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய குறைந்தப்பட்ச பேரூந்து கட்டணம் 40 ரூபாவாக நிர்ணயிக்கபபட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மிலான் மிருன்டா தெரிவித்தார்.
நிறைவடைந்த 6மாத காலத்தில் மாத்திரம் எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேரூந்து கட்டணம் ஐந்து முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய கட்டண திருத்தம் திருப்திகரமானதாக அமையவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய கட்டண திருத்தத்திற்கமைய குறைந்தப்பட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாகவும்,அதிகூடிய பேரூந்து கட்டணம் 2948 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண திருத்த அட்டவணை பேரூந்துகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கட்டண திருத்தம் தொடர்பில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நிறைவடைந்த 6மாத காலப்பகுதியில் மாத்திரம் எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேரூந்து கட்டணம் 4 முறை திருத்தம் செய்யப்பட்டன.
வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தனியார் மற்றும் அரச பேரூந்து சங்கத்தினர் பல யோசனைகளை முன்வைத்தனர்.
எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட 11 அடிப்படை காரணிகளை கொண்டு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேரூந்து கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் முன்வைத்த யோசனைகளில் தொழிற்சங்கத்தினர் மத்தியில் இணக்கப்பாடு காணப்படவில்லை.
பேரூந்து கட்டணம் 20 அல்லது 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பேரூந்து தொழிற்சங்கத்தினர் முன்வைத்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.
பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பேரூந்து கட்டணத்தை 21.85 சதவீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டு குறைந்தப்பட்ச பேரூந்து கட்டணம் 40 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேரூந்து சேவையினை பயன்படுத்தும் பொது பயணிகள் சேவையின் போது தாங்கள் எதிர்க்கொள்ளும் அசௌகரியங்களை 1955 என்ற தொலைப்பேசி ஊடாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போது பொது போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் ஒருசில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிறைவடைந்த ஆறு மாதகாலப்பகுதியில் எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேரூந்து கட்டணம் ஐந்து முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய கடந்த ஜனவரி மாதம் 17.44 சதவீதத்தினாலும், மார்ச் மாதம் 15 சதவீதத்தினாலும், ஏப்ரல் மாதம் 35சதவீதத்தினாலும்,மே மாதம் 19.5 சதவீதத்தினாலும் பேரூந்து கட்டணம் திருத்தம் செய்யப்பட்டன.
கடந்த மாதம் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றம் மற்றும் வருடாந்த கட்டண திருத்தம் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பேரூந்து கட்டணம் 21.85 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேரூந்து கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை. தற்போதைய விலையேற்றம் திருப்திகரமானதாக அமையவில்லை என தனியார் பேரூந்து சங்கத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM