முல்லைத்தீவில் மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

Published By: Vishnu

30 Jun, 2022 | 03:13 PM
image

கே .குமணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை தேடி பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல்  துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயற்ப்பாட்டிற்கு  எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு  நகர் பகுதியில் 30 ஆம் திகதி காலை பத்து மணிக்கு  பெண்கள் பலர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 

போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை தங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை  முன்னெடுத்தனர் .

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்றம் வரை கவனயீர்ப்பு நடைபயணமாக வந்த போராட்டக்காரர்கள் நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தில்   ஈடுபட்டவர்கள் குறித்த  குற்றவாளிகளுக்காக   சட்டத்தரணிகள் முன்னிலையாக கூடாது எனவும் இவருக்கு வழங்கும் அதிகபட்ச  தண்டனையானது இனி இவ்வாரு ஒருவர் செய்ய எண்ணாத அளவில் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58