எரிபொருள் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மின் கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டது

By T. Saranya

30 Jun, 2022 | 11:28 AM
image

ராஜகிரிய ஒபேசேகர பகுதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களை  திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியொன்று மின் கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக ஒபேசேகரபுர பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் எரிபொருளை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே எரிபொருள் பவுசருக்காக மக்கள் தங்கள் வாகனங்களுக்குள் காத்திருக்கும் போது கார் உதிரிபாகங்கள் மற்றும் எரிபொருள்கள் திருடப்பட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் எரிபொருள் இணைப்புகளை வெட்டி ஒரு திட்டமிடப்பட்ட கும்பல்கள் திருடி வந்துள்ளன.

இவ்வாறு திருட்டு நடவடிக்கைக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றே இவ்வாறு மின்கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right