பரா ஈட்டி எறிதலில் துலான் உத்தியோகப்பற்றற்ற உலக சாதனை

Published By: Vishnu

30 Jun, 2022 | 10:34 AM
image

(நெவில் அன்தனி)

தேசிய பராலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட தேசிய பரா தடகள போட்டியில் சிரேஷ்ட பிரிவில் ஆண்களுக்கான எவ் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பராலிம்பிக் பதக்க வீரர் துலான் கொடிதுவக்கு புதிய தேசிய பரா மெய்வல்லுநர் சாதனையை நிலைநாட்டினார்.

( வைப்பக படம் )

அவரால் பதிவு செய்யப்பட்ட 66.60 மீற்றர் தூரம் டோக்கியோ 2020 பராலிம்பிக் போட்டியில் நிலைநாட்பட்ட உலக சாதனையை விட சிறந்த தூரப் பெறுதியாகவும் உத்தியோகப்பற்றற்ற உலக சாதனையாகவும் அமைந்தது.

டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான எவ் 44 பிரிவு ஈட்டி எறிதலில் அவுஸ்திரெலிய மாற்றுத்திறனாளி மைக்கல் பியூரியன் 66.29 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார். அதே போட்டியில் பங்குபற்றிய துலான் 65.61 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

துலான் பதிவு செய்த தூரம் அதனைவிட சிறந்ததாக அமைந்தபோதிலும் அது உலக சாதனையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இலங்கையில் நடத்தப்படும் தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகள் சர்வதேச பராலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட போட்டி அல்லவென்பதால் துலானின் தூரப் பெறுதியை தெசிய சாதனையாக இப்போதைக்கு கருத முடியாது என தேசிய பராலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச தரம்வாய்ந்த தொழில்நுட்ப அளவுகோள்கள் இல்லாததாலும் நேர்த்திசை காற்றின் வேகத்தைப் பதிவுசெய்யக்கூடிய கருவி இல்லாததாலும் துலானின் தூரப் பெறுதியை உலக சாதனையாக கருத முடியாது என தெரிவிக்கப்பட்டது.  

எவ்வாறாயினும் துலானின் தூரப் பெறுதியை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22