கைதி உயிரிழந்தமையால் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை : தடுப்பிலிருந்து தப்பியோடிய 600 பேரில் 250 பேர் பொலிஸில் சரண்

Published By: Digital Desk 4

29 Jun, 2022 | 08:22 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர்  சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்தனை அடுத்து, குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 முதல் 600 வரையிலான கைதிகள், புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் தடுப்புகளை மீறி, அதன் பிரதான வாயில் மற்றும் வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இந் நிலையில், கைதி ஒருவரின்  சந்தேகத்துக்கு இடமான மரணம் மற்றும்  நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் அங்கிருந்து தப்பியோடியமை தொடர்பிலும் பிரத்தியேக சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்படுகின்ற 997 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

இவர்களில் இருந்தே   சுமார் 500 இற்கும் 600 இற்கும் இடைப்பட்ட எண்ணிகையிலானோர் தப்பிச்சென்றதாக  அவர் கூறினார்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சியின் தகவல்கள் பிரகாரம்,

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து நேற்று (28) புகையிலை மீட்கப்பட்டுள்ளது. முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இது மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கைதிக்கும் அங்கு பனியில் இருக்கும்  ஆலோசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வலுவடைந்து கைகலப்பாக மாறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக  புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி  குறிப்பிட்டார். அது முதலே அந்த மையத்தில் அமைதியின்மை பற்றும் பதற்றம் தோன்றியுள்ளது.

இவ்வாறான சம்பவத்தினிடையேயே,  பதுளை - ஹாலி எல - தெமோதறை பகுதியை சேர்ந்த 35 வயதான கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் தகவல்கள் பிரகாரம் குறித்த கைதி, பதுளை நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய புனர்வாழ்வுக்கு அனுப்பட்டிருந்த கைதியாவார்.

இந் நிலையிலேயே,  இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெலிகந்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இன்று (29) காலை வெலிகந்தை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்,  குறித்த மரணம் தொடர்பாக விசாரிக்க கந்த காடு புனர்வாழ்வு மையத்துக்கு சென்றுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவின் தகவல்களின் படி, பொலிஸார் அங்கு சென்ற போது, உயிரிழந்திருந்த கைதியின் சடலம் அருகே பொலிஸார் செல்ல கைதிகள் நிபந்தனைகள் பலவற்றை விதித்துள்ளனர்.

 இந் நிலையிலேயே பொலிஸார் கைதிகளுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கையில், நிலைமை தீவிரமடைந்து  கைதிகளில் ஒரு பகுதியின், புனர்வாழ்வு முகாமின் வேலிகளையும் பிரதான வாயிலையும் உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  அவர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரையும் மீறி, கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து சோமாவத்தி சைத்திய பகுதியை நோக்கி சென்றுள்ளனர்.

இந் நிலையில் தப்பிச் சென்ற கைதிகளை கைது செய்ய பொலிஸாரும் இராணுவத்தினரும் உடனடியாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி தப்பிச்சென்ற கைதிகளுக்கும் அவர்களை தேடிச்சென்ற பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே, பொலன்னறுவை சோமாவதிய வீதியிலுள்ள சுங்காவில் பாலத்திற்கு அருகே மோதல் ஏற்பட்டது. இதன்போது, கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து கைதிகளை கட்டுப்பாட்டுக்குள் பொலிஸாரும் இராணுவத்தினரும் கொண்டு வந்துள்ளனர்.

 இவ்வாறான நிலையிலேயே இன்று (29) மாலை 6.30 மணியாகும் போதும் தப்பிச் சென்றவர்களில் 250 பேர் வரை  புலஸ்தி புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் பலர் சரணடைய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறு சரணடைவோரையும் தப்பிச் செனற ஏனையோரையும் கைது செய்து,  நீதிமன்ற உத்தரவின் கீழான தடுப்பிலுருந்து தப்பிச் சென்றமையை மையப்படுத்தி நீதிமன்றில்  ஆஜர் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க விஷேட பொலிஸ் குழுவொன்று  கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 இது இவ்வாறிருக்க, கந்த காடு புனர்வாழ்வு மையத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக உயிரிழந்த கைதியின் சடலம் பின்னர் பொலிஸாரால் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவானும் ஸ்தலத்துக்கு வந்து பார்வை இட்டு பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.

 இந் நிலையில் உயிரிழந்த கைதியின் உடலில் சந்தேகத்துக்கு இடமான  அடையாளங்களை பொலிசார் அவதானித்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

 இந் நிலையில் நீதிவான் சென்ற பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல பொலிஸார் தயாராண போது புனர்வாழ்வு மையத்தில் இருந்த சுமார் 300 இற்கும் அதிகமான கைதிகள் ஒன்று சேர்ந்து அதனை தடுத்து, சடலத்தை அவர்களின் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, இன்று மாலையாகும் போது சோமாவத்தி  விகாரையை நோக்கி ஊர்வலமாக செல்லலாயினர். அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று ( 29) மாலை இச்செய்தி அச்சுக்கு போகும் போதும்  பொலிஸ் மற்றும் இராணுவத்தின் இணைந்த நடவடிக்கைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 இந் நிலையில், குறித்த கைதியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் வெலிகந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிஒலான சிறப்புக் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரேத பரிசோதனையின் பின்னரேயே கைதியின் மரணம் தொடர்பில்  உறுதியான நிலைப்பாட்டுக்கு வர முடியும் என பொலிஸார் கூறினர்.

இந் நிலையில் கைதியின்  மரணம் தொடர்பில் பக்கச்சார்பின்றி விசாரணை முன்னெடுத்து, எந்த அதிகாரியேனும் அதில் தொடர்பு பட்டிருப்பின் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி  பொலிசாரிடம் கோரியுள்ளார்.

இதனைவிட அவர்களில் 232 பேர் மீண்டும்  புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் ஊடாக சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56