எரிபொருள் பற்றாக்குறையினால் ரயில் சேவை முழுமையாக பாதிப்படைய கூடும் : இன்று  26 ரயில் சேவைகள் இரத்து  

Published By: Digital Desk 4

29 Jun, 2022 | 06:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரயில்வே சேவையாளர்கள் சேவைக்கு சமுமளிப்பதற்கு எரிபொருளை விநியோகிக்க உரிய தரப்பினர் அவதானம் செலுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்கப்படும். பொது மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக ரயில் சேவை காணப்படுகின்ற நிலையில் பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு போக்குவரத்து அமைச்சு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.

ரயில் சேவைகள் நாளை முதல் அதிகரிப்பு - தூர பிரதேச ரயில் சேவைகள் ஆரம்பிக்காது  | Virakesari.lk

 அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மிக மோசமான தீவிரமடைந்துள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக புகையிரத கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் நகரங்களுக்கிடையிலான ரயில், தூரசேவை பயணிகள் ரயில், அலுவலக ரயில் சேவை உள்ளிட்ட 26 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வாதுவை, பாணந்துறை, றம்புக்கனை, மீரிகம, வெயாங்கொட, அம்பேபுஸ்ஸ, நீர்கொழும்பு, மாதம்பே, மற்றும் அவிசாவெல்ல ஆகிய பகுதிகளுக்கான அலுவலக ரயில்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டன. அத்துடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும் உதயதேவி ரயில் மற்றும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி புறப்படும் ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரயில் சேவையும் இவ்வாறு  இரத்து செய்யப்பட்டன.

அவிசாவெல்ல நோக்கி புறப்படும் பொதி விநியோக சேவை ரயில் இரத்து செய்யப்பட்டதால் மருதானை ரயில் நிலையத்தில் அவிசாவெல்ல ரயில் நிலையம் வரை விநியோகிக்கும் 300 பொதிகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த பொதிகள் விரைவாக விநியோகிக்க வேண்டியவை.

தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவையான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் ரயில்சேவையாளர்கள் சேவையில் ஈடுப்படுகிறார்கள்.

ரயில் சேவையாளர்களுக்கு தங்குமிட வசதிகள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான சேவையாளர்கள் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் சேவைக்கு சமுகமளிப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

பொது மக்கள் அதிகளவில் ரயில் சேவையினை பயன்படுத்தும் நிலையில் ரயில் சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முறையான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்காவிடின் இனி வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்க கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப்பொருள்

2023-09-30 08:50:46
news-image

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி இராஜினாமா...

2023-09-30 08:54:35
news-image

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை...

2023-09-30 08:38:16
news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38