சிறந்த தலைமைத்துவத்திற்கான தட்டுப்பாடே நாட்டின் முக்கிய பிரச்சினை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

Published By: Vishnu

29 Jun, 2022 | 08:04 PM
image

(நா.தனுஜா)

இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பாரிய தட்டுப்பாடு டொலருக்கும் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கும் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு என்று கூறப்படும் கருத்தைத் தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்திருக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அமால் குமாரகே, மாறாக இலங்கையில் சிறந்த தலைமைத்துவத்திற்குக் காணப்படும் தட்டுப்பாடே மிகப்பாரியதும் தீவிரமானதுமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

 நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முற்றாக முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கான நடவடிக்கைகள் எவையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாத நிலையில், இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: 

'எரிபொருள், எரிவாயு, டொலர் ஆகியவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடே இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. மாறாக இலங்கையில் சிறந்த தலைமைத்துவத்திற்கே தட்டுப்பாடு நிலவுகின்றது. 

உரியவாறு கையாளக்கூடிய ஒவ்வொரு நெருக்கடியும் ஆபத்தாக விரிவடைந்து, அந்த ஆபத்து வேறோர் பிரச்சினையைத் தோற்றுவிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் உன்னிப்பாக அவதானித்தால், அங்கு தலைவர்களின் தலைமைத்துவத்தில் குறைபாடு இருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்' என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17
news-image

சிறப்பு படகுகள் படைப்பிரிவுப் பயிற்சியை நிறைவு...

2026-04-11 14:46:46
news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட...

2026-04-11 14:08:23
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26