நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவத்தயார் - பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் 

By T Yuwaraj

29 Jun, 2022 | 04:00 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயமாற்று விபரங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார நிலைவரத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

Vicky Ford | MP for Chelmsford

பிரிட்டன் பொது அவைக்கு எழுத்துமூலம் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் விக்கி ஃபோர்ட், கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் சுமார் 30 சதவீதமான வருமானத்தைப் பெற்றுக்கொடுத்த சுற்றுலாத்துறையே இலங்கையின் முக்கிய வருமானமீட்டல் துறையாகக் காணப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 80 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் சுற்றுலாத்துறை, 2021 ஆம் ஆண்டில் 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது.

அந்நாட்டு சுற்றுலாத்துறைக்கான முக்கிய பங்களிப்பாளராக பிரிட்டன் விளங்குகின்றது. கடந்த மூன்று வருடகாலமாக இலங்கைக்கு மூலப்பொருட்களை விநியோகிக்கும் மூன்று முக்கிய வழங்குனர்களில் இலங்கையும் உள்ளடங்குகின்றது என்றும் பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் விக்கி ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று வருடகாலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணவனுப்பல்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவந்திருப்பதுடன் அவை இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே 8 மற்றும் 9 சதவீதமாக அமைந்துள்ளன.

இருப்பினும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணவனுப்பல்கள் 2021 ஆம் ஆண்டில் 20 சதவீதத்தினால் வீழ்ச்சிகண்டிருப்பதுடன், இது கடந்த 2011 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான தரவுகளின் பிரகாரம் மிகவும் உயர்வான வீழ்ச்சியாக அமைந்திருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதைத் தாம் அங்கீகரிப்பதாகவும், இப்பொருளாதாரத்தை மீண்டும் நிலைபேறான பாதைக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் ஆழமான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ள பிரிட்டன் அமைச்சர் விக்கி ஃபோர்ட், தமது பிரதமர் கடந்த மேமாதம் 30 ஆம் திகதி இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான தமது கடப்பாட்டை அவர் மீளவலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

75 ஆவது சுதந்திர தினம் கரிநாளாக...

2023-01-28 16:41:56
news-image

இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை...

2023-01-29 10:23:51
news-image

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் ஆரம்பம்

2023-01-29 09:29:47
news-image

சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார...

2023-01-28 13:02:13
news-image

தேர்தல் இடம்பெறுமா ? இல்லையா ?...

2023-01-28 12:59:57
news-image

வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர்...

2023-01-28 13:55:10
news-image

கிண்ணியாவில் புதையல் தோண்ட வேனில் பயணித்த...

2023-01-28 12:37:27
news-image

பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல்...

2023-01-28 11:31:02
news-image

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி...

2023-01-28 15:35:58
news-image

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும்...

2023-01-28 15:13:05
news-image

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினரையும் பதவி...

2023-01-29 09:26:07
news-image

காணி தகராறு ; இருவர் கொலை

2023-01-28 13:55:45