(எம்.ஆர்.எம்.வசீம்)
நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான மலேஷிய நாட்டு உயர் ஸ்தானிகர் டன் யங் தாய் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன் ற29 ஆம் திகதி புதன்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்போது விசேடமாக இரண்டு நாடுகளுக்கிடையில் இருக்கும் சந்தை மற்றும் ராஜதந்திர தொடர்புகள் தொடர்பாகவும் இலங்கை மற்றும் மலேஷியாவுக்கு மத்தியில் இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டடிருந்தது.
இரு நாடுகளுக்கிடையில் நீண்டகால நற்புறவு இருந்து வருவதாகவும் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு மலேஷிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் இருந்துவரும் தொடர்புகளை மேலும் முன்னேற்றுவதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் தங்களின் நாட்டின் ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற்றுத்தருவதாகவும் உயர் ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்ததாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM