பெருங்கூற்றுக்களை வெளியிடுகின்ற போதிலும் சீனா ரஸ்யாவின் அரசியல் பொருளாதார நலன்களை புறக்கணிக்கின்றது.

By Rajeeban

29 Jun, 2022 | 03:11 PM
image

சீனா ரஸ்யாவிற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் கடந்த சில வாரங்களில் மொஸ்கோவின் நலன்களை காப்பாற்றும் விதத்தில் செயற்படவில்லை.

இது ரஸ்ய அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதுடன் அவர்கள் இது குறித்து சமீபத்தைய சந்திப்புகளில் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் வரம்புகள் அற்ற கூட்டாண்மையை சீனா உறுதிசெய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீனா இஉக்ரைன் இராணுவநடவடிக்கைக்கு முந்தைய  வர்த்தக கடப்பாடுகளை பேணவேண்டும்இ புதிய வடிவிலான பொருளாதார ஆதரவை வழங்கவேண்டும் எனவும் ரஸ்ய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சீனாவிடமிருந்து அதிகளவு ஒத்துழைப்பை கோரிய சீனாவிற்கான ரஸ்ய தூதுவர் அன்ரேய் டெனிசோவ் இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு வடிவத்தில் கூட்டணியில்லை மாறாக கூட்டணியை விட அதிகமானது என தெரிவித்தார்.

ஜூன் 12ம் திகதி சங்கிரிலா கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்கே உக்ரைன் மோதலில்  சீனா ரஸ்யாவிற்கு படை ஆதரவை வழங்கவில்லைஇரஸ்யாவுடனான உறவு கூட்டணியில்லை எந்த மூன்றாம் உலக நாட்டிற்கும் எதிரானதில்லை என தெரிவித்தார்.சீனா எப்போதும் அமைதிபேச்சுவார்த்தைக்கு ஆதரவளித்துவந்துள்ளது ஆயுதங்களை வழங்குவதை எதிர்க்கின்றது உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வை காணமுயலும்போது அழுத்தங்களைவிதிப்பதை எதிர்க்கின்றது எனவும் அவர்தெரிவித்தார்.

இதேவேளை சமீபத்தில் இடம்பெற்ற உள்ளக ஆய்வில் உக்ரைன் ரஸ்ய விவகாரம்இறைமையை அடிப்படையாக கொண்டது சீனாவால் ரஸ்யாவிற்கு முழுமையான ஆதரவை வழங்க முடியாது என சீனாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.வெளிவிவகார கட்டமைப்பிலிருந்து சமீபத்தில் லே லுச்சங்கை   அகற்றும் சீனாவின் முடிவு சீனாவிற்கு மிகவும் நெருக்கமாக ரஸ்யா மாறியுள்ளது என்ற சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியின் கொள்கையை கரிசனையை வெளிப்படுத்தக்கூடும்.

லே லுசங் சமீபகாலத்தில் சீனாவின்தலைசிறந்த ரஸ்ய விவகார நிபுணராக காணப்பட்டார்இதுணை வெளிவிவகார அமைச்சராக காணப்பட்ட இவர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.சீனாவிற்கு தற்போது ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடனான உறவுகளை கையாளக்கூடிய தலைவர்கள்தேவை  என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஜூன் 15 ம் திகதி சீன ஜனாதிபதியின் பிறந்ததினத்தன்று ரஸ்ய சீன ஜனாதிபதிகள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்உக்ரைன் மீதான  ரஸ்யாவின் நடவடிக்கைகளை விமர்சிப்பதுமில்லை அங்கீகரிப்பதும் இல்லை என்ற நிலைப்பாட்டை இதன் பின்னர் சீனா வெளியிட்ட அறிக்கை மீண்டும் வெளிப்படுத்தியது.

அனைத்து தரப்பினரும் இந்த நெருக்கடிக்குதீர்வை காண்பதற்கு முயலவேண்டும் இந்த விடயத்தில் பங்களிப்பு செய்வதற்கு சீனா தயார் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு விவகாரங்கள் உட்பட முக்கிய விடயங்களில் சீனா ரஸ்யாவிற்கு ஆதரவளிக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உக்ரைன் மீதான ஷி ஜின்பிங்கின் ரஷ்யா கொள்கைக்கு சீனாவிற்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஃபீனிக்ஸ் டிவிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில்இ சீனாவின் சொந்த நலன்கள் வெளிப்புறக் காரணிகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு சாமர்த்தியம் தேவை என்று முன்னணி அறிஞர் யான் சூடாங் குறிப்பிட்டார்.

மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமே பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதற்கும் ரஷ்யாவிற்குள் வணிக உறவுகளை வளர்ப்பதற்கும் சீனா அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் என்று சீனத் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. 

தனக்கான ஆபத்துகளை குறைத்துகொண்டு மூலோபாய ரீதியில் தனக்கு முக்கியமான சகாவிற்கு உதவவேண்டிய தர்மசங்கடமான நிலையை சீனா எதிர்கொண்டுள்ளது.

சீனாவின் இக்கட்டான நிலை அதன் சொந்த வளர்ச்சிக்கு முக்கியமான தொழில்நுட்பங்களைத் துண்டிக்கக்கூடிய இரண்டாம் நிலைத் தடைகள் பற்றிய அச்சத்தை எடுத்துக்காட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right