ஜப்பானில் வரலாறு காணாத வெப்பம்

By T. Saranya

29 Jun, 2022 | 04:24 PM
image

ஜப்பானில் கடந்த 150 வருடங்களில் முதன்முறையாக வெப்பநிலையானது  கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

டோக்கியோவில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை  பதிவாகியுள்ளது. 1875 இல் பதிவான வெப்பநிலையை விட ஜூன் மாதத்தில் மிக மோசமான  வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது.

ஜப்பான் தலைநகரின் வடமேற்கே உள்ள இசெசாகி நகரத்தில்  40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாகும்.

கடுமையான வெப்பம் காரணமாக மின் துண்டிப்பை அமுல்படுத்த வழிவகுத்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரத்தை சேமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடும் வெப்பநிலை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்  வெப்பத் தாக்குதலைத் தவிர்க்க ஏர் கண்டிஷனிங்கைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வரும் நாட்களில் வெப்பம் தொடரும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலைகள் அடிக்கடி, அதிக தீவிரமாக நீண்ட காலம் நீடிக்கின்றன.

தொழில்துறை சகாப்தம் ஆரம்பித்ததிலிருந்து உலக வெப்பம் சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் நடவடிக்கைகள் எடுக்காவிடின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

ஜூன் மாதம் பொதுவாக ஜப்பானுக்கு மழைக்காலமாகக் கருதப்படுகிறது, ஆனால் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) திங்களன்று டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான மழைக்காலம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு வழக்கத்தை விட 22 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1951 முதல் மழைக்காலத்தின் ஆரம்ப முடிவைக் குறிக்கிறது.

கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் வெப்ப பக்கவாதம் நோயாளர்களும் அதிகரித்துள்ளன, புதன்கிழமை குறைந்தது 76 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right