புட்டின் ஒரு பயங்கரவாதி - உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி

By T. Saranya

29 Jun, 2022 | 05:05 PM
image

உக்ரேனிய நகரமான க்ரெமென்சுக்கில் 1,000 க்கும் அதிகமான மக்கள் இருந்த ஒரு பல்பொருள் அங்காடியை ரஷ்ய ஏவுகணைகள் அழித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒரு "பயங்கரவாதியாக"  மாறிவிட்டார் என உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த ஏவுகணை தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். 

நான்கு மாதங்களுக்கும் மேலாக, ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்  இடம்பெற்று வருகிறது.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த மோதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வெளியிட்டுள்ள காணொளி செய்தியில் ஜெலென்ஸ்கி, 

பால்டிக் குடியரசுகள், போலந்து, மால்டோவா மற்றும் கஜகஸ்தான் ஆகியவை மற்ற ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயங்கரவாத நடவடிக்கையை கொண்டுவருவதைத் தடுக்க ரஷ்யாவை நீதியின் முன் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right